நோக்கியா 7 பிளஸ் பெறுகிறது புதிய அப்டேட் உடன் கிடைக்கும்

HIGHLIGHTS

ஹெச்எம்டி குளோபல் சமீபத்தில் அறிமுகம் செய்த நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் புதிய அப்டேட் இந்த வசதியை வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

நோக்கியா 7 பிளஸ் பெறுகிறது புதிய அப்டேட்  உடன் கிடைக்கும்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான நோக்கியா 7 பிளஸ் விரைவில் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த அப்டேட்டில் டூயல் வோல்ட்இ வசதி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதனை ஹெச்எம்டி குளோபல் நிறுவன மூத்த அதிகாரியான ஜூஹோ சர்விகாஸ் ட்விட்டர் மூலம் உறுதி  செய்திருக்கிறார். இரண்டாம் சிம் விரைவில் டூயல்-வோல்ட்இ வசதியை பெறும் (Second-SIM will get dual-VoLTE shortly) என தனது ட்விட்-இல் அவர் குறிப்பிட்டிருந்தார்.

புதிய அப்டேட் குறித்து சரியான தேதியை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நோக்கியா 7 பிளஸ் அதன் தலைசிறந்த வடிவமைப்பு மற்றும் கேமரா அம்சங்களுக்கு அதிகம் பாராட்டப்பட்டது. எனினும் இரண்டாவது சிம் ஸ்லாட்டில் வோல்ட்இ வசதி வழங்கப்படாதது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. 

நோக்கியா 7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 2160×1080 ஃபுல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3800 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் சமீபத்தில் விற்பனை துவங்கப்பட்ட நிலையில் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக்/காப்பர் மற்றும் வைட் /காப்பர் என டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளம் மற்றும் சங்கீதா, பூர்விகா, பிக் சி, க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற ஆஃப்லைன் வர்த்தக மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.25,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய நோக்கியா 7 பிளஸ் விவோ வி9, ஒப்போ F7 பிளஸ் மற்றும் மோட்டோ X4 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo