நோக்கியா 7.2 மூன்று கேமராக்களுடன் இன்டர்நெட்டில் லீக்.

நோக்கியா 7.2 மூன்று கேமராக்களுடன் இன்டர்நெட்டில் லீக்.

HMD  குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனினை ஹெச்.டி.ஆர். பியூர்வியூ டிஸ்ப்ளே, இரட்டை பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்நிலையில், நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக நோக்கியா 7.2 உருவாகி வருகிறது.

அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் சில ஊடக நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. செய்ஸ் குழுமத்தை சேர்ந்த ஜோச்சிம் குஸ் நோக்கியா 7.2 கேமரா திறன் சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என தெரிவித்து, ஸ்மார்ட்போனின் பின்புறம் தெரியும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

புகைபடத்தின் படி கேமரா சென்சாரின் கீழ் கைரேகை சென்சார் காணப்படுகிறது. இதுதவிர நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். 10 வசதி, அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம். இது அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. 2019 விழாவில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படலாம்.

அதன்படி நோக்கியா 7.2 மாடலில் வட்ட வடிவ கேமரா மாட்யூலில் மொத்தம் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் காணப்படுகிறது. இதில் 48 எம்.பி. பிரைமரி சென்சார், வைடு ஆங்கில் சென்சார் மற்றும் டெப்த் சென்சிங் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile