ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் நோக்கியாவின் அசத்தலான போன்.

ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் நோக்கியாவின்  அசத்தலான போன்.
HIGHLIGHTS

புதிய நோக்கியா 6.3 ஸ்மார்ட்போனில் 24 எம்பி பிரைமரி கேமரா

நோக் கியா 6.3 ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமரா, 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படும்

HMD குளோபல் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனான நோக்கியா 6.3 மாடல் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. தற்சமயம் வெளியாகியுள்ள புதிய தகவல்களில் பிராசஸர் தவிர நோக்கியா ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களும் வெளியாகி இருக்கிறது.

இத்துடன் நோக்கியா 6.3 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் வழங்கப்படும் என்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பவர் பட்டனிலேயே பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனை ஒரே கையில் பயன்படுத்த ஏதுவாக சிறிய ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதன்படி புதிய நோக்கியா 6.3 ஸ்மார்ட்போனில் 24 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், மேக்ரோ லென்ஸ் மற்றும் டெப்த் சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுவரை நோக்கியா 6.3 ஸ்மார்ட்போனின் விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

முந்தைய தகவல்களின் படிநோக் கியா 6.3 ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமரா, 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படும் என்றும் இதன் விலை 249 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 20,400 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo