Nokia 5.3 மற்றும் Nokia 5310 இந்திய வலைதளத்தில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

Nokia 5.3 மற்றும் Nokia 5310 இந்திய வலைதளத்தில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

HMD  குளோபல் நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. நோக்கியா 8.3 5ஜி, நோக்கியா 5.3, நோக்கியா 1.3 மற்றும் நோக்கியா 5310 கிளாசிக் உள்ளிட்டவற்றை ஹெச்.எம்.டி. குளோபல் அறிமுகம் செய்தது. எனினும், இவற்றில் இரு மாடல்களை மட்டும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.

அந்த வகையில் நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 5310 மாடல்கள் நோக்கியா இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது. நோக்கியா 5.3 5ஜி மற்றும் நோக்கியா 1.3 உள்ளிட்டவை எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச சந்தையில் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் விலை இந்திய மதிப்பில் ரூ. 47794 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இது இந்தியாவில் IQ 3 மற்றும் ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி உள்ளிட்ட மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த வாய்ப்புகள் குறைவே. இதனால் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் கடும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் அறிமுககம் செய்யப்படலாம் என தெரிகிறது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 2 எம்.பி. மேக்ரோ சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 4000 Mah . பேட்டரி, பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இத்துடன் நோக்கியா 5310 மொபைலையும் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 3 ஜி.பி. + 64 ஜி.பி., 4 ஜி.பி. + 64 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. + 64 ஜி.பி. என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

சர்வதேச சந்தையில் நோக்கியா 5.3 விலை 189 யூரோக்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 15,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo