Nokia 3.4 மற்றும் 2.4 ஸ்மார்ட்போன் மாடல்கள் லீக்

Nokia  3.4 மற்றும்  2.4 ஸ்மார்ட்போன் மாடல்கள் லீக்
HIGHLIGHTS

நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலையில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.

இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HMD குளோபல் நிறுவனம் நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலையில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. 

அந்த வகையில் இவற்றின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவற்றின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறியப்படவில்லை.

சர்வதேச சந்தையை தொடர்ந்து தற்சமயம் இரு மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்கள் நோக்கியா இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. 

சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் பன்ச் ஹோல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4500 எம்ஏஹெச் பேட்டரி, டூயல் பிரைமரி கேமராக்கள், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo