Nokia வின் 3.2 ரூ.8,990 விலையில் இந்தியாவில் அறிமுகம், இதன் சிறப்பம்சத்தை என்ன வாங்க பாக்கலாம்.
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவிகித கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இச்சலுகை மே 23 ஆம் தேதி துவங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது
Nokia 3.2 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.8,990 என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷனின் விலை ரூ.10,790 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
HMD குளோபல் நிறுவனம் இந்தியாவில் அதன் HMD நோக்கியா 3.2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை சர்வதேச மொபைல் காங்கிரஸ் MWC நிகழ்வின் பொது இதை அறிமுகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து இந்தியாவில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனுக்கு அடுத்த மாடலாக இருக்கும்.
Surveyஇந்த புதிய நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் HD பிளஸ் a-Si TFT LCD ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படுகிறது.
Nokia 3.2 சிறப்பம்சங்கள்:
– 6.26 இன்ச் 720×1520 பிக்சல் HD. பிளஸ் TFT LCD ஸ்கிரீன், செல்ஃபி நாட்ச்
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட்
– அட்ரினோ 504 GPU
– 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
– 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, F2.2/1.12µm பிக்சல்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.2/1.12µm பிக்சல்
– பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை
– ஆண்ட்ராய்டு 9 பை
– மைக்ரோ யு.எஸ்.பி.
– ஃபேஸ் அன்லாக்
– பிங்கர்ப்ரின்ட் சென்சார் (32 ஜி.பி. மெமரி மாடலில் மட்டும்)
இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் நோட்டிஃபிகேஷன் லைட் கீ மற்றும் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதன் 3 ஜி.பி. ரேம் மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள நிலையில், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
விலை மற்றும் விற்பனை
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஸ்டீல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.8,990 என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷனின் விலை ரூ.10,790 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மே 23 ஆம் தேதி துவங்குகிறது.
அறிமுக சலுகைகள்:
– நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனை வாங்குவோர் “LAUNCHGIFT” எனும் குறியீட்டை பயன்படுத்தும் போது ரூ.1000 கிஃப்ட் கார்டு பெறலாம். இச்சலுகை ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
– ஸ்மார்ட்போன் வாங்கியதில் இருந்து முதல் ஆறு மாதங்களுக்கு ஸ்கிரீனை ஒரு முறை மட்டும் இலவசமாக சரி செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இச்சலுகையும் ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
– வோடபோன் ஐடியா சந்தாதாரர்களுக்கு ரூ.2,500 மதிப்புள்ள உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த வவுச்சர்களை ரூ.199 மற்றும் அதற்கும் அதிக சலுகைகளை தேர்வு செய்யும் போது பெற்றிட முடியும்.
– இத்துடன் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவிகித கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இச்சலுகை மே 23 ஆம் தேதி துவங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile