நோக்கியா 2 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் கிடைத்துள்ளது.

நோக்கியா 2  ஸ்மார்ட்போனுக்கு  ஆண்ட்ராய்டு  ஓரியோ  அப்டேட்  கிடைத்துள்ளது.
HIGHLIGHTS

HMD குளோபல் நிறுவனம் நோக்கியா 2 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கியிருக்கிறது.

HMD குளோபல் நிறுவனம் நோக்கியா 2 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கியிருக்கிறது. நோக்கியா 2 ஸ்மார்ட்போன் 2017 ஆம்  ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கிறது. 

நோக்கியா 2 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்குவதற்கென HMD  குளோபல் கூகுள் மற்றும் குவால்காம் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறது. புதிய இயங்குதளம் ஸ்மார்ட்போனில் சீராக இயங்க வைக்க மேனுவல் முறையில் அப்டேட் செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. 

நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அப்டேட் செய்வது எப்படி?

நோக்கியா 2 ஆண்ட்ராய்டு அப்டேட் பக்கத்திற்கு செல்லவும்.
நோக்கியா அக்கவுண்ட்டில் சைன்-இன் செய்ய வேண்டும்.
சாதனத்தை IMEI பாஸ்வர்ட் கொண்டு வேலிடேட் செய்ய வேண்டும்.
நெட்வொர்க் ஆப்பரேட்டர் பெயரை பதிவிட வேண்டும்.
லொகேஷனை சேர்க்க வேண்டும்.
“Android Oreo for Nokia 2 software license terms” விதிகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
நிறைவுற்றதும் Request OTA பட்டனை க்ளிக் செய்யவும்.
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ OTA அப்டேட் நோட்டிஃபிகேஷன் கிடைக்கும்.

நோக்கியா 2 ஸ்மார்ட்போனினை வாங்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக HMD. குளோபல் தெரிவித்திருக்கிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo