இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது Nokia 1 Plus சிறப்பம்சங்கள்…!

இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது  Nokia 1 Plus  சிறப்பம்சங்கள்…!
HIGHLIGHTS

HMD . குளோபல் நிறுவனம் பிப்ரவரி 24 ஆம் தேதி பார்சிலோனாவில் தனது புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது

HMD . குளோபல் நிறுவனம் பிப்ரவரி 24 ஆம் தேதி பார்சிலோனாவில் தனது புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவ்விழாவில் அந்நிறுவனத்தின் நோக்கியா 9 பியூர்வியூ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஹை ரேஷியோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் தவிர என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது நோக்கியா 1 பிளஸ் என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் அதன் சிறப்பம்சங்களுடன் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது. 

நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 1 ஜி.பி. ரேம், மீடியாடெக் சிப்செட், ஆண்ட்ராய்டு 9 பை (கோ எடிஷன்) இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. டைகர் மொபைல் வெளியிட்டிருக்கும் ரென்டர்களின் படி நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஒற்றை செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 

கனெக்டிவிட்டியை பொருத்த வரை நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், ஜி.பி.எஸ்., வைபை, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்படுகிறது. புதிய நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீடு பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 480×960 பிக்சல் டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739WW சிப்செட், பவர் வி.ஆர். GE8100 GPU கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க கேமரா அம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை.. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo