NOKIA 1.3 இருக்கலாம் நிறுவனத்தின் அடுத்த என்ட்ரி லெவல் போன்
HMD குளோபல் விரைவில் அதன் மற்றொரு விழி குறைந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும். நோக்கியாவின் இந்த புதிய மாடல் நம்பர் TA-1213 உடன் ப்ளூடூத் சர்டிபிகேஷன் சைட்டில் காணப்பட்டது. அது Nokia 1.3 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.புதிய ஸ்மார்ட்போன் என்ட்ரி லெவல் நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் என கூறப்படுகிறது.
Surveyமுந்தைய சாதனங்களை போன்று புதிய ஸ்மார்ட்போனும் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தின் கீழ் வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்படலாம். இதனால் புதிய ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் விரைவாக வழங்கப்படலாம்.
ப்ளூடூத் எஸ்.ஐ.ஜி. வலைத்தளத்தில் லீக் ஆகியிருக்கும் விவரங்களின் படி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் TA-1123 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 பிராசஸர், 4ஜி கனெக்டிவிட்டி, ப்ளூடூத் 4.2 வசதி கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை, எனினும் இது அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பாபர்க்கப்படுகிறது.
சமீபத்தில் HMD . குளோபல் நிறுவனம் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. என்ட்ரி லெவல் அம்சங்கள் நிறைந்த இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8,199 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டிருக்கும் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லோ-லைட் அம்சம், ஹெச்.டி.ஆர். வசதி, 2 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile