புதிய Meizu 16Xs 6ஜிபி ரேம் மற்றும் மூன்று கேமராக்களுடன் அறிமுகம்.

புதிய  Meizu 16Xs 6ஜிபி ரேம் மற்றும் மூன்று கேமராக்களுடன் அறிமுகம்.

Meizu நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது 16Xs மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஃபுல் HD . பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது..

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Meizu 16Xs சிறப்பம்சங்கள்

– 6.2 இன்ச் 1080×2232 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. + 18.6:9 சூப்பர் AMOLED ஆன்-செல் டிஸ்ப்ளே
– 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
– அட்ரினோ 612 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் ஃபிளைம் ஓ.எஸ். 7
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.25″ சாம்சங் ISOCELL பிரைட் GM1 சென்சார், 0.8um பிக்சல்
– 8 எம்.பி. 118.8° அல்ட்ரா-வைடு கேமரா, f/2.2
– 5 எம்.பி. கேமரா, f/1.9
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 Mah  பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Meizu 16Xs ஸ்மார்ட்போன் ஃபிளைம் ஓ.எஸ். 7 சார்ந்த ஆண்ட்ராய்டு பை மற்றும் ஒன் மைண்ட் 3.0 ஏ.ஐ. இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சாம்சங் ISOCELL பிரைட் GM1 சென்சார், 8 எம்.பி. 118.8° அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 5 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா, AI  பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. Meizu 16Xs ஸ்மார்ட்போனின் பின்புறம் பிலெக்சிகிளாஸ் பேக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4000 MAH  பேட்டரி, 18 வாட் எம்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது

விலை தகவல் 
புதிய Meizu 16Xs ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், புளு, கோரல் ஆரஞ்சு மற்றும் சில்க் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1698 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.17,150) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.20,180) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo