ப்ளாக்பெரி அறிமுகப்படுத்தியுள்ளது 128 GB ஸ்டோரேஜ் உடன் அதன் KEY 2 ரெட் எடிசன்

HIGHLIGHTS

பிளாக்பெரி KEY 2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் MWC 2019 யில் அறிமுகம் செய்யப்பட்டது

ப்ளாக்பெரி  அறிமுகப்படுத்தியுள்ளது  128 GB  ஸ்டோரேஜ்  உடன் அதன்  KEY 2 ரெட் எடிசன்

பிளாக்பெரி KEY 2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் MWC 2019 யில்  அறிமுகம் செய்யப்பட்டது. பிளாக்பெரி கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் யூசர் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டிருக்கிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அதன்படி ரெட் எடிஷன் பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போனின் ஆப்களில் நவீன தோற்றம் பெற்றிருக்கின்றன. புதிய ஸ்மார்ட்போனின் பக்கவாட்டுகள் மற்றும் முன்புறம் சிவப்பு நிறம் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருப்பதை போன்று கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனில் 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஹப் பிளஸ் சோப்ட்வர் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஹப் பிளஸ் செயலிகளின் கீழ் புதிதாக ஆக்‌ஷன் பார் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் பயனர்களுக்கு சர்ச், சார்ட் மற்றும் கம்போஸ் போன்ற அம்சங்களை இயக்க முடியும். இதேபோன்று பிளாக்பெரி ஹப் சேவையின் இன்டர்ஃபேசும் மாற்றப்பட்டுள்ளது.

பிளாக்பெரி KEY 2ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. புதிய பிளாக்பெரி KEY 2ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை 779 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.63,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக வட அமெரிக்கா, ஐரோப்பியா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா உள்ளிட்ட சந்தைகளில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

புதிய ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு பிளாக்பெரி இயர்பட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பிய பிளாக்பெரி மொபைல் ஆன்லைன் தளத்தில் முன்பதிவு துவங்கி இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile