Motorola சமிபத்தில் அதன் புதிய புத்தக வடிவ ஃபோல்டபில் போனை Motorola Razr Fold அறிமுகம் செய்தது இதன் விற்பனை இப்பொழுது தொடங்கியுள்ளது, குறிப்பிடத்தக்க வகையில், விற்பனை தொடங்கிய உடனேயே கஸ்டமர்கள் கவர, அந்நிறுவனம் பல அற்புதமான சலுகைகளை வழங்குகிறது. நோ கோஸ்ட் EMI மற்றும் இலவச ஸ்கிரீன் மாற்றுதல் போன்ற அம்சங்களுடன், இந்த பிரீமியம் மடிக்கக்கூடிய போன் மேலும் கவர்ச்சிகரமான சலுகையாக மாறியுள்ளது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
மோட்டோரோலா ரேஸர் ஃபோல்ட் விலை-
நிறுவனம் இந்த மாடலில் குறிப்பிடத்தக்க விற்பனைச் சலுகைகளை வழங்குகிறது. இந்தச் சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் HDFC மற்றும் Axis வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ,10,000 வரையிலான உடனடி வங்கித் தள்ளுபடி அல்லது எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பெறலாம். பேங்க் தள்ளுபடியுடன், ஃபோனின் விலை மேலும் குறைக்கப்படும். இதன் மூலம் கஸ்டமர்கள் அடிப்படை மாடலை ₹1,39,999-க்கும், டாப் மாடலை ₹1,49,999-க்கும், மற்றும் ஸ்பெஷல் எடிஷனை ₹1,59,999-க்கும் வாங்க முடியும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளில் 18 மாதங்கள் வரையிலான நோ கோஸ்ட் EMI விருப்பங்கள் கிடைக்கின்றன. இது கஸ்டமர்களுக்கு இந்த பிரீமியம் போல்டபில் ஸ்மார்ட்போனை வாங்குவதை எளிதாக்குகிறது.
அந்த நிறுவனம் ஒரு சிறப்புப் பாதுகாப்புச் சலுகையையும் வழங்குகிறது. ஜூன் 20, 2026 வரை மோட்டோரோலா ரேஸர் ஃபோல்டை வாங்கும் பயனர்கள், வாங்கிய தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குச் வேலிடிட்டியாகும் வகையில், ஒரு முறை இலவசத் ஸ்க்ரீன் மாற்றத்தைப் பெறுவார்கள்.
Motorola Razr Fold 6.6 இன்ச் கவர் டிஸ்ப்ளே உடன் வருகிறது இது 165Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 6000 நிட்ஸ் ப்ரைட்னாஸ் சப்போர்ட் செய்கிறது இதை தவிர இதில் 8.1 இன்ச் பெரிய போல்டபில் LTPO pOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, இதில் 2K ரேசளுசன் 120Hz ரெப்ரஸ் ரேட் Ultra Thin Glass ப்ரொடெக்ஷன் வழங்குகிறது.
இந்த ஃபோனின் டிசைன் மெலிதானது, மேலும் போல்டபில் நிலையிலும் ஒரு பிரீமியம் லுக் தருகிறது. இந்த ஃபோன், சமீபத்திய ப்லக்ஷிப் சிப்செட்டான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 ப்ரோசெசரில் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான மை யுஎக்ஸ் (My UX) இயங்குதளத்தில் இயங்குகிறது, மேலும் ஏழு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தல்களை வழங்குவதாக நிறுவனம் உறுதியளிக்கிறது
மோட்டோரோலா ரேஸர் ஃபோல்ட், 50MP ப்ரைமரி கேமரா, 50MP டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50MP அல்ட்ராவைடு கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக, 32MP கவர் ஸ்கிரீன் கேமரா மற்றும் 20MP பின்புற கேமரா உள்ளன. இந்த போன் 8K வீடியோ ரெக்கார்டிங்கை சப்போர்ட் செய்கிறது .
பேட்டரியைப் பொறுத்தவரை, இதில் 6000mAh பேட்டரி உள்ளது, இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஃபோன் 5G, Wi-Fi 7, NFC, GPS மற்றும் USB Type-C போன்ற அம்சங்களையும் வழங்குகிறது. மேலும், இது IP49 ரேட்டிங் பெற்றிருப்பதால், அடிப்படை வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் திறனை வழங்குகிறது.