புதிய வகை செல்பி கேமராவுடன் Motorola One Vision ஸ்மார்ட்போன் அறிமுகம்.

புதிய  வகை செல்பி கேமராவுடன்  Motorola One Vision ஸ்மார்ட்போன்  அறிமுகம்.
HIGHLIGHTS

ஸ்மார்ட்போனின் பின்புறம் 4D கார்னிங் கொரில்லா கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பிங்கர்ப்ரின்ட் சென்சார் பேக் பேனலில் வழங்கப்பட்டுள்ளது

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் சஃபையர் புளு, பிரவுன் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 299 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.23,520) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலா ஒன் விஷன் என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் HD. பிளஸ் 21:9 சினிமா விஷன் LCD  டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

எக்சைனோஸ் 9609 பிராசஸர் கொண்டிருக்கும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 25 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்ட்டுள்ளது. இத்துடன் 1.8µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருப்பதால் குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான செல்ஃபிக்களை எடுக்க முடியும்.

போட்டோ எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, நைட் விஷன் மோட், OIS மற்றும் குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து தெளிவான 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் விஷன் சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 1080×2520 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ்LCD
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் 9609 பிராசஸர்
– 4 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, OIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டூயல் மைக்ரோபோன்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3500Mah . பேட்டரி
– 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஸ்மார்ட்போனின் பின்புறம் 4D கார்னிங் கொரில்லா கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பிங்கர்ப்ரின்ட் சென்சார் பேக் பேனலில் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் 3500 Mah  பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது இதனை வேகமாக சார்ஜ் செய்ய 15 வாட் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை 

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் சஃபையர் புளு, பிரவுன் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 299 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.23,520) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சவுதி அரேபியா மற்றும் தாய்லாந்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின் ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் ஆஸ்திரேலியா உள்ள நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo