Motorola One Power Android One ஸ்மார்ட்போன் இந்தியாவில் 24 செப்டம்பர் அறிமுகம் செய்யலாம்…!

HIGHLIGHTS

மோட்டோரோலா ஒன் பவர் மாடலில் 6.2 இன்ச் 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ள

Motorola One Power Android One ஸ்மார்ட்போன் இந்தியாவில் 24 செப்டம்பர் அறிமுகம் செய்யலாம்…!

மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் பவர் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் பெர்லின் நகரில் நடைபெற்ற IFA  விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 24-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக மோட்டோரோலா அறிவித்துள்ளது…!

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மோட்டோரோலா ஒன் பவர் மாடலில் 6.2 இன்ச் 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் பிங்கரப்ரின்ட் சென்சார், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆன்ட்ராய்டு கியூ அப்டேட்கள் வழங்குவதாக மோட்டோரோலா அறிவித்துள்ளது.

மோட்டோரோலா ஒன் பவர் சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 3 ஜிபி, 4 ஜிபி ரேம் 
– 32 ஜிபி, 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 12 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 Mah . பேட்டரி
– டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile