MOTOROLA Edge 70 Fusion (3)
நீங்கள் Motorola பிரியராக இருந்தால் MOTOROLA Edge 70 Fusion போனை இப்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,24,999க்கு வாங்கலாம், அதாவது இந்த போனை அதன் லிஸ்ட்டிங் விலையை விட ஒரே அடியாக ரூ,2,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் MRP விலை என பார்க்கும்போது ரூ,42,999க்கு இருந்தது அதாவது இந்த போனின் விலை ரூ,18,000 வரை குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் மிக பெரிய 7000Mah பேட்டரியுடன் வருகிறது மேலும் இந்த போனில் இருக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் பல அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
MOTOROLA Edge 70 Fusion போனின் விலை பிளிப்கார்டில் இதன் அடிப்படை வேரியன்ட் 8 GB + 128 GB ஸ்டோரேஜ் ரூ,26,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,24,999க்கு வாங்கலாம் இதே போல மற்ற அணைத்து வேரியண்டிலும் ரூ,2000 டிஸ்கவுண்டில் வாங்கலாம் இதன் MRP விலை என பார்க்கும்போது ரூ,42,999க்கு வாங்கலாம் அதாவது இந்த போனின் விலை ரூ,18,000 வரை குறைந்த விலையில் வாங்கலாம்.
Motorola Edge 70 Fusion 6.78-இன்ச் 1.5K எக்ஸ்ட்ரீம் AMOLED டிஸ்ப்ளேவை 144Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 5,200 நிட்களின் உச்ச ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. ஸ்க்ரீன் HDR10+ சப்போர்ட் 10-பிட் கலர் வருகிறது, மேலும் டிஸ்ப்ளே கார்னிங்கின் கொரில்லா கிளாஸ் 7i ஆல் பாதுகாக்கப்படுகிறது. நீடித்து உழைக்கும் முன்பக்கத்தில், எட்ஜ் 70 ஃப்யூஷன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் IP68 மற்றும் IP69 ரெட்டிங்க்களை கொண்டுள்ளது.
இதையும் படிங்க நீங்கள் வெயிட் பண்ணி காத்து கொண்டிருந்த MOTOROLA edge70 proஅறிமுகம் டாப் அம்சங்கள் பார்த்தால் அசந்து போவிங்க
ப்ரோசெசர் பற்றி பேசினால், எட்ஜ் 70 ஃப்யூஷன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 4 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது மற்றும் 12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.மற்றும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹலோ UI யில் இயங்குகிறது , இது 3 OS அப்டேட்களுக்கு மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்களை உறுதியளிக்கிறது.
கேமரா பற்றி பேசுகையில் எட்ஜ் 70 ஃபியூஷன்,இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, 50MP சோனி LYTIA 710 பிரைமரி ஷூட்டர் மற்றும் மேலும் 120 டிகிரி பார்வை புலத்துடன் கூடிய 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் இதில் மேக்ரோ லென்ஸ் சப்போர்டுடன் வருகிறது இதனுடன் இந்த போனில் முன்புறத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32MP ஷூட்டர் உள்ளது. பின்புறம் மற்றும் செல்ஃபி ஷூட்டர்களில் இருந்து 4K 30fps வீடியோ ரெக்கர்டிங்க்க்கான சப்போர்டுடன் இந்த போன் வருகிறது. இந்த போனில் ஒரு பெரிய 7000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியுடன் நிரம்பியுள்ளது மற்றும் 68W டர்போபவர் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.