x-chat-number
X யின் தலைமை அதிகாரியான Elon Musk தனது புதிய மெசேஜிங் X Chat சோசியல் மீடியா தளத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்த X Chat மிகவும் பாப்புலரான மெசேஜிங் தளமான WhatsApp மற்றும் Arattai போன்றவைக்கு கடும் போட்டியாக அமையும். மேலும் இந்த மெசேஜிங் தளமானது மிகவும் பாதுகப்பனதாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது இதில் end-to-end encryption அம்சத்தின் மூலம் உங்கள் சேட் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த X Chat யில் மெசேஜ் மட்டும் இல்லாமல் வொயிஸ் மற்றும் ஆடியோ கால்களையும் செய்ய முடியும் இப்பொழுது இந்த ஆப்யில் ‘X Number என்ற அம்சத்தை தனது பயனர்களுக்கு அறிவித்துள்ளது இதன் மூலம் தங்களின் நம்பரை சேர் செய்வதற்கு பதிலாக இப்பொழுது மொபைல் நம்பர் சேர் செய்யாமலே மெசேஜ் மற்றும் கால் செய்ய முடியும் , இருப்பினும் நம்பர் இல்லாமல் மெசேஜ் கால் எவ்வளவு பாதுகப்பனது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
செப்டம்பர் 2026-ல் அறிமுகப்படுத்தப்பட்ட X நம்பர் என்பது , சிம் வசதியுள்ள ஒரு உண்மையான போன நம்பர் அல்ல, மாறாக அது ஒரு தனிப்பட்ட கோட் ஆகும். நீங்கள் ஒரு புதிய நபர், ஃப்ரீலான்சர் அல்லது பிஸ்னஸ் வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்ள விரும்பினால், உங்கள் உண்மையான மொபைல் நமபருக்கு பதிலாக இந்தக் கோட் வழங்கலாம்.
X Numbers are here.
— XChat (@chat) September 22, 2026
Share yours with anyone you want to contact you, even if you don't follow them. It's an optional way for people to message or call you, without you needing to accept requests or follow them back. pic.twitter.com/HkObZSQMhm
XChat-க்குத் தனியான போன் நம்பர் தேவையில்லை. உங்கள் பழைய X அக்கவுண்டே போதுமானது. ஐபோன் (iOS) பயனர்களுக்காக ஏப்ரல் 2026-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் ஆப், இப்போது X ஆப்யின் சேட் (Chat) பிரிவில் கிடைக்கிறது. இது உங்கள் ப்ரைவசியை பாதுகாத்துக்கொண்டே, யாருடனும் எளிதாகத் தொடர்புகொள்ள உங்களை அனுமதிக்கிறது.
நீங்கள் XChat யில் X நம்பர் உருவாக்க கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றலாம் அதில்
அதே பகுதியிலிருந்து, பயனர்கள் ‘Share’ (பகிர்தல்) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்; இதன் மூலம், பழைய நம்பரை மட்டுமே வைத்திருப்பவர்களால் அந்த நம்பரை பயன்படுத்திப் பயனரைத் தொடர்புகொள்ளவோ அல்லது புதிய காண்டேக்ட்டாக சேர்க்கவோ இனி முடியாது.
மற்றொரு பயனரைத் தொடர்புகொள்ள X எண் எப்போதும் தேவைப்படுவதில்லை. பெறுநர் செய்தி கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால், பயனர்கள் X நம்பரை போடாமலே ஒரு மெசேஜை அனுப்பலாம், அந்தச் மெசேஜ் ரேகுவஸ்ட் என்பதன் கீழ் தோன்றும்.
இதையும் படிங்க TRAI யின் புதிய ரூல் டேட்டா முக்கியமில்லை ஆனால் வொயிஸ் SMS கட்டாயம் இருக்க வேண்டும்
இருப்பினும், பெறுநரின் இன்பாக்ஸ் மூடப்பட்டிருந்தால், அனுப்புநர் அவர்களை ஏற்கனவே பின்தொடர்ந்தாலோ, அவர்களுடன் ஏற்கனவே செட் கான்வேர்ஷேஷன் செய்து இருந்தாலோ அல்லது X-இன் தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தாலோ தவிர, ஒரு X நம்பர் தேவைப்படலாம். மேலும், பெறுநர் உண்மையில் ஒரு X நம்பரை செயல்படுத்தியுள்ளாரா என்பதையும் அந்த நோட்டிபிகேஷன் வெளிப்படுத்துவதில்லை.
XChat-யின் விரிவான மெசேஜ் செட்டிங் , என்க்ரிப்டட் கான்வேர்ஷேஷன் சப்போர்ட் செய்கிறது ; தகுதியான கான்வேர்ஷேஷன்களில் மெசேஜ் கன்டென்ட், கனெக்ஷன்கள் , ஊடகம் மற்றும் எதிர்வினைகள் ஆகியவை மறைகுறியாக்கப்படுகின்றன. இருப்பினும், பெறுநர் மற்றும் மெசேஜ் உருவாக்கப்பட்ட நேரம் போன்ற அதனுடன் தொடர்புடைய மெட்டாடேட்டா கிடைத்த மெசேஜ் என்க்ரிப்ட் செய்யப்படுவதில்லை என கூறப்பட்டுள்ளது.