Motorola யின் நீங்க எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

Motorola இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் Motorola Edge 60 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்தது

இந்த போனில் MediaTek Dimensity 7300 ப்ரோசெசர் மற்றும் Moto AI அம்சம் போன்ற பல இருக்கிறது

இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 60 விலை ரூ.25,999 ஆகும்

Motorola யின் நீங்க எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Motorola இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் Motorola Edge 60 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்தது.இந்த போன் ஏற்கனவே உலகலாவின் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த போனில் MediaTek Dimensity 7300 ப்ரோசெசர் மற்றும் Moto AI அம்சம் போன்ற பல இருக்கிறது இதனுடன் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Motorola Edge 60 விலை தகவல்

இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 60 விலை ரூ.25,999 ஆகும், மேலும் இது ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே வருகிறது, இது 12 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ் வழங்குகிறது. இது இரண்டு கலர் விருப்பங்களில் கிடைக்கும், பான்டோன் ஜிப்ரால்டர் சீ (நைலான் போன்ற பினிஷ் ) மற்றும் பான்டோன் ஷாம்ராக் (லெதர் போன்ற பினிஷ் ). ஜூன் 17 முதல் பிளிப்கார்ட், மோட்டோரோலா.இன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் போனின் விற்பனை தொடங்கும். அறிமுக சலுகையாக, ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி பேங்க் கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ.1,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம்.

Motorola Edge 60 டாப் அம்சம்.

டிஸ்ப்ளே :- Moto Edge 60 யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.7-inch 1.5K pOLED குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே உடன் இதில் 2712 x 1220 பிக்சல் ரெசளுசனுடன் இதில் 4500nits யின் பீக் ப்ரைட்னஸ் உடன் 120Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது.

ப்ரோசெசர்:-இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7300 சிப்செட் ப்ரோசெசருடன் ஆண்ட்ரோய்ட் 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது இதை தவிர இது 12GB RAM + 256GB ரேம் ஸ்டோரேஜில் வருகிறது.

கேமரா:- கெமர செட்டிங் பொறுத்தவரை இந்த போனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது அதில் 50MP யின் ப்ரைமரி கேமரா சென்சார் உடன் (Sony LYTIA 700C) OIS சப்போர்ட் வழங்குகிறது,இதனுடன் இதில் 50MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 10MP டெலிபோட்டோ கேமரா சப்போர்ட் செய்கிறது மற்றும் இது 3x ஆப்டிக்கல் ஜூம் OIS மற்றும் 30x சூப்பர் ஜூம் அடங்கியுள்ளது இதனுடன் இதில் செல்பிக்கு 50MP முன் கேமரா வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க Vivo புதிய போன் அறிமுக தகவல் ரிலீஸ் எப்போ எந்த தேதி பற்றி முழுசா தெருஞ்சிகொங்க

பேட்டரி:- பேட்டரி பற்றி பேசுகையில் Motorola Edge 60 போனில் 5500mAh பேட்டரியுடன் 68W TurboPower பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு 4G VoLTE, Wi-Fi 6E, Bluetooth 5.4, GPS और USB Type-C ஆகியவை வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68 மற்றும் IP69 இரண்டு சர்டிபிகேசன் சப்போர்ட்டும் வழங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo