Moto Z4 4GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் வகையுடன் அறிமுகம்.

Moto Z4 4GB  ரேம் மற்றும் 128 GB  ஸ்டோரேஜ் வகையுடன் அறிமுகம்.
HIGHLIGHTS

- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 OLED டிஸ்ப்ளே

- 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, PDAF, OIS, லேசர் ஆட்டோபோகஸ்

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் 6.4 இன்ச் ஃபுல் HD பிளஸ் OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

MOTO Z4 சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 OLED டிஸ்ப்ளே
– 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
– அட்ரினோ 612 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, PDAF,  OIS, லேசர் ஆட்டோபோகஸ்
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 0.9um பிக்சல்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– ஸ்பிளாஷ் ரெசிஸ்டண்ட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரி

 15 வாட் டர்போ சார்ஜிங்

போட்டோ எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது குவாட்-பிக்சல் தொழில்நுட்பம் மூலம் 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் OIS, செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் 25 எம்.பி. செல்ஃபி கேமரா, 1.8µm குவாட் பிக்சல் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது செல்ஃபிக்களை 6.25 எம்.பி. தரத்தில் வழங்கும்.

இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பேக், 6000 சீரிஸ் பாலிஷ் செய்யப்பட்ட அனுமினியம் ஃபிரேம், P2i ஸ்பிளாஷ் ப்ரூஃப் நானோ கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போனில் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விலை தகவல் 

மோட்டோ Z4 ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் கிரே மற்றும் ஃபிராஸ்ட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 499.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.34,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo