60MP செல்பி கேமராவுடன் அறிமுகமானது Moto X40 ஸ்மார்ட்போன்.

60MP செல்பி கேமராவுடன் அறிமுகமானது Moto X40 ஸ்மார்ட்போன்.
HIGHLIGHTS

மோட்டோரோலா தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான மோட்டோ எக்ஸ்40யை அறிமுகப்படுத்தியுள்ளது.

Moto X40 ஆனது FullHD Plus AMOLED டிஸ்ப்ளேவுடன் 165 Hz அப்டேட் வீதக் டிஸ்பிலேவை கொண்டுள்ளது

Moto X40 Xiaomi 13, IQoo 11 மற்றும் Vivo X90 போன்ற ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடுகிறது.

ஸ்மார்ட்போன் பிராண்டான மோட்டோரோலா தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான மோட்டோ எக்ஸ்40யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் தற்போது உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ எக்ஸ்30க்கு அடுத்தபடியாக மோட்டோ எக்ஸ்40 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Moto X40 ஆனது FullHD Plus AMOLED டிஸ்ப்ளேவுடன் 165 Hz அப்டேட் வீதக் டிஸ்பிலேவை கொண்டுள்ளது. போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 ப்ரோசெசர் மற்றும் 60 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா ஆதரவு உள்ளது. 12 ஜிபி வரை ரேம் மற்றும் 512 ஜிபி வரை சேமிப்பகம் ஃபோனுடன் ஆதரிக்கப்படுகிறது. Moto X40 Xiaomi 13, IQoo 11 மற்றும் Vivo X90 போன்ற ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடுகிறது.

Moto X40 யின் விலை 

Moto X40 ஆனது Smokey Black மற்றும் Tourmaline Blue வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போன் நான்கு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது. 128 ஜிபி ஸ்டோரேஜுடன் கூடிய இதன் 8 ஜிபி ரேம் விலை $ 487 அதாவது தோராயமாக ரூ 40,318 மற்றும் 8 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்பு $ 530 அதாவது தோராயமாக ரூ 43,875 ஆகும். அதே சமயம், 12 ஜிபி ரேம் கொண்ட போனின் 256 ஜிபி ஸ்டோரேஜ் விலை $ 573 அதாவது தோராயமாக ரூ.47,435 மற்றும் 12 ஜிபி ரேம் கொண்ட 512 ஜிபி ஸ்டோரேஜ் விலை $ 617 அதாவது தோராயமாக ரூ.51,000 ஆகும்.

Moto X40 யின் சிறப்பம்சம்.

Moto X40 ஆனது 6.7 இன்ச் FullHD Plus Curved AMOLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டுள்ளது. 165 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் HDR10+ ஆதரவு டிஸ்பிளேயுடன் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 செயலியுடன் 12 ஜிபி வரை LPPDR5x ரேம் மற்றும் 512 ஜிபி வரை UFS 4.0 ஸ்டோரேஜிர்க்கான ஆதரவை இந்த ஃபோன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MyUI 5.0 ஃபோனுடன் ஆதரிக்கப்படுகிறது.

போனின் கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், அதனுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா கிடைக்கிறது. பிரைமரி கேமராவுடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உள்ளது. போனில் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் உள்ளது. Moto X40 செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 60 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது. கேமரா மூலம் 4K வீடியோவையும் பதிவு செய்யலாம்.

Moto X40 ஆனது 125W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இணைப்பிற்கு, ஃபோனில் டூயல் சிம், 5ஜி, வைஃபை, புளூடூத், என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo