MOTO G9 ஸ்மார்ட்போன் அசத்தலான ஆபருடன் பிளிப்கார்டில் இன்று முதல் விற்பனை.

HIGHLIGHTS

Moto G9 முதல் விற்பனை ஆகஸ்ட் 31 ஆன இன்று பகல் 12PM மணிக்கு முதல் விற்பனைக்கு வருகிறது

Moto G9 விலை ரூ. 11499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

புதிய மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் சஃபையர் புளூ நிறங்களில் கிடைக்கிறது

MOTO G9 ஸ்மார்ட்போன் அசத்தலான ஆபருடன் பிளிப்கார்டில் இன்று  முதல் விற்பனை.

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி9 பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MOTO G9 யின் விலை மற்றும் ஆபர் 

புதிய மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் சஃபையர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது, இதன் முதல் விற்பனை  ஆகஸ்ட் 31 ஆன  இன்று பகல் 12PM  மணிக்கு  முதல் விற்பனைக்கு  வருகிறது  இந்த மொபைல்  போனை  பிளிப்கார்டில் வாங்கலாம்.

Moto G9  ஸ்மார்ட்போனில் மோட்டோரோலாவிலிருந்து விற்பனை சலுகைகள் பற்றி நாம் பேசினால், ICICI வங்கி அல்லது Yes பேங்கின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மோட்டோ ஜி 9 ஸ்மார்ட்போன் வாங்கும்போது ரூ .500 உடனடி தள்ளுபடியைப் பெறலாம்  இது தவிர, உங்களுக்கு EMI விருப்பங்களையும் வழங்குகிறது..

Moto G9  சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்பி பிரைமரி கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 2 எம்பி டெப்த் கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 20 வாட் டர்போபவர் சார்ஜிங்

இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்கள், பின்புறம் கைரேகை சென்சார், 5000Mah பேட்டரி மற்றும் 20 வாட் டர்போபவர் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறத

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo