Moto G7 சீரிஸ் சிறப்பம்சம் மற்றும் விலை லீக் ஆகியுள்ளது..!

Moto G7 சீரிஸ்  சிறப்பம்சம்  மற்றும் விலை  லீக் ஆகியுள்ளது..!
HIGHLIGHTS

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் துவங்கும் 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் துவங்கும் 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலா இம்முறை மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம். என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இன்டர்நெட்டில் வெளியாகியுள்ளது. கீக்பென்ச் வெப்சைட்டில் வெளியாகி இருக்கும் தகவல்களில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 3 ஜி.பி. ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களிலும் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 AIE ஆக்டா-கோர் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியண்ட்டில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.  

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் எட்ஜ்-டு-எட்ஜ் 6.4 இன்ச் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச், 3500 Mah  பேட்டரி, பின்புறம் 12 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் இவற்றின் விலை ரூ.20,000-க்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo