இந்தியாவில் Moto G7 ஸ்மார்ட்போன் 5000Mah பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 632 உடன் அறிமுகம்..!

HIGHLIGHTS

புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் 60 மணி நேரங்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என மோட்டோரோலா தெரிவித்துள்ளது

இந்தியாவில் Moto G7 ஸ்மார்ட்போன்  5000Mah  பேட்டரி மற்றும்  ஸ்னாப்டிராகன் 632  உடன் அறிமுகம்..!

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் 60 மணி நேரங்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என மோட்டோரோலா தெரிவித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Moto G7 பவர் சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 1570×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் LTPS LCD 19:9 டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, LED  ஃபிளாஷ், f/2.0, 1.25um பிக்சல்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12um பிக்சல்
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 5,000 Mah பேட்டரி
– 15 வாட் டர்போ சார்ஜிங்

புதிய ஸ்மார்ட்போனில் மோட்டோரோலாவின் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.2 இன்ச் 19:9 பேனல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் மற்றும் 5000 Mah . பேட்டரி கொண்டிருக்கிறது. 

இந்தியாவில் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் எனும் ஒற்றை நிறத்தில் கிடைக்கிறது. புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் ரீடெயில் விற்பனை கடைகளில் விற்பனைக்கு  வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile