Moto G7 மற்றும் Motorola One ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம், இதன் ஆரம்பவிலை Rs 13,999 இருக்கிறது.

Moto G7 மற்றும் Motorola One ஸ்மார்ட்போன் இந்தியாவில்  அறிமுகம், இதன் ஆரம்பவிலை  Rs 13,999 இருக்கிறது.
HIGHLIGHTS

Moto G7 வெளியாவதற்க்கு முன்பே பல டீசர் மற்றும் லீக் வெளியாகி இருந்தது. இருப்பினும் Motorola One இந்தியாவில் சத்தமில்லலாமல் அறிமுகம் செய்யப்பட்டது

Motorola அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போனை  Moto G7 மற்றும் Motorola One இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இதனுடன் Moto G7  வெளியாவதற்க்கு  முன்பே  பல  டீசர்  மற்றும் லீக்  வெளியாகி இருந்தது. இருப்பினும்  Motorola One இந்தியாவில்  சத்தமில்லலாமல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இரண்டு  ஸ்மார்ட்போனின்  பின் புறத்தில் இரட்டை கேமரா  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் 4GB ரேம் கொடுக்கப்பட்டுள்ளது.  Moto G7 யில் ஸ்னாப்ட்ரகன் 632 SoC, 6.24-இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது, அதுவே Motorola One  யில்  5.9- இன்ச் டிஸ்பிளே  மற்றும் ஸ்னாப்ட்ரகன்  625 SoC உடன் அறிமுகம் செய்யப்பட்டது 

விலை மற்றும் ஆபர் 

மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போன்கள் க்ளியர் வைட் மற்றும் செராமிக் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ.16,999 மற்றும் ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Moto G7 சிறப்பம்சங்கள்:

– 6.24 இன்ச் 2270×1080 பிக்சல் ஃபுல் ஹெசி.டி. பிளஸ் 19.5:9 ரக டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆகடா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– வாட்டர் ரெசிஸ்டண்ட் P2i கோட்டிங்
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.25um பிக்சல்
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2 
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளுடூத் 4.2
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3000 Mah . பேட்டரி
– 15 வாட் டர்போ சார்ஜிங்

Motorola One  சிறப்பம்சங்கள்:

– 5.9 இன்ச் 1520×720 பிக்சல் 18.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா
– வாட்டர் ரெசிஸ்டண்ட் P2i நானோ கோட்டிங்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3000 Mah  பேட்டரி
– 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3டி கிளாஸ் பேக் கொண்டிருக்கும் மோட்டோ ஜி7 மாடலின் பின்புறம் கைரேகை சென்சார், 3000 Mah ச். பேட்டரி மற்றும் 15 வாட் டர்போ சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo