விரைவில் வெளியாக இருக்கும் Moto G6 மற்றும் G6 Plus ஸ்மார்ட்போன் பற்றி சில தகவல் லீக் ஆகியுள்ளது

விரைவில் வெளியாக இருக்கும்  Moto G6 மற்றும் G6 Plus ஸ்மார்ட்போன்  பற்றி சில தகவல் லீக் ஆகியுள்ளது
HIGHLIGHTS

இந்த போட்டோவில் வந்த வதந்தியின் படி இதில் 18:9 எஸ்பெக்ட் ரேஷியோ LCD டிஸ்பிளே கொண்டிருக்கும்

ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் லெனோவோவின் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே மற்றும் மோட்டோ ஜி6 பிளஸ் என மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மோட்டோரோலா வெளியிட்டிருக்கும் டீசரில் இருக்கும் ஸ்மார்ட்போன் மாடல் குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை என்றாலும், மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
டீசர் வீடியோவில் கருப்பு நிற ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம் மற்றும் வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், முன்பக்க கைரேகை சென்சார் டிஸ்ப்ளேவின் கீழ் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

 

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனில்  18:9  எஸ்பெக்ட் ரேஷியோ LCD 5.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 ஆக்டாகோர் சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக அதிகரிக்கும் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.93 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டாகோர் சிப்செட், 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, டூயல் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 
 
மோட்டோ ஜி6 பிளஸ், மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளே ரென்டர்களில் ஸ்மார்ட்போன்களில் வெவ்வேறு நிறங்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை ப்ளூடூத், 4ஜி எல்டிஇ, வோல்ட்இ சப்போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறத

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo