இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக அதன் புதிய ஸ்மார்ட்போனான Moto G52 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கிய அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 50 மெகாபிக்சல் கேமரா அமைப்பு மற்றும் poLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் Moto G52 பற்றிய விரிவான தகவல்களை விலை முதல் அம்சங்கள் வரை வழங்குவோம். சமீபத்திய மோட்டோரோலா மொபைல் இந்த பிரிவில் மிக மெல்லிய மற்றும் இலகுவான தொலைபேசியாகக் கூறப்படுகிறது, அதன் தடிமன் 7.99 mm மற்றும் எடை 169 ஆகும்.
அதன்படி புது மோட்டோ G52 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+pOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 12, பக்கவாட்டில் கைரேகை சென்சார், யு.எஸ்.பி. டைப் சி கனெக்டிவிட்டி, 5ஜி, 5000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
– 6.6 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் FHD+ மேக்ஸ்விஷன் pOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 4GB / 6GB ரேம்
– 64GB / 128GB மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 12 மற்றும் My UX
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 50MP பிரைமரி கேமரா, f/1.8
– 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் / டெப்த் கேமரா, f/2.2
– 2MP மேக்ரோ கேமரா, f/2.4
– 16MP செல்ஃபி கேமரா, f/2.45
– 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப் சி
– 5000mAh பேட்டரி
– டர்போ பவர் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போன் சார்கோல் கிரே மற்றும் போர்சிலெயின் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போனின் 4GB, 64GB மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்றும், 6GB, 128GB மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை மே 3 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.