மோட்டோரோலா புதிய ஸ்மார்ட்போன் Moto G Fast என்ற பெயரில் அறிமுகமாகும்.

மோட்டோரோலா புதிய ஸ்மார்ட்போன்  Moto G Fast என்ற பெயரில் அறிமுகமாகும்.
HIGHLIGHTS

புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் குவால்காம் பிராசஸர் வழங்கப்படும்

மோட்டோரோலா சிறு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருப்பதை அந்நிறுவனம் தெரியப்படுத்தி இருக்கிறது. இதற்கென மோட்டோரோலா சிறு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
 
புதிய ஸ்மார்ட்போனிற்கென மோட்டோரோலா விளம்பர வீடியோ ஒன்றை யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஃபாஸ்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

மோட்டோரோலா மோட்டோ ஜி ஃபாஸ்ட் ஸ்மார்ட்போன் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் இது அதிவேகமாக இயங்குவதோடு, இதன் கேமரா தலைசிறந்த புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டிருக்கும் என வெளியான தெரியவந்துள்ளது.

மோட்டோரோலா மோட்டோ ஜி ஃபாஸ்ட் ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம், பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. தற்போதைய விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகமாகி அதன்பின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இதுதவிர புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் குவால்காம் பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. வீடியோவின் படி புதிய ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, பின்புறம் மூன்று பிரைமரி கேமரா சென்சார், எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo