Moto G 5G ஸ்மார்ட்போனின் தகவல் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது

HIGHLIGHTS

மோட்டோ ஜி சீரிஸ் மாடலாக இருக்கலாம் என்றும் இதில் 5ஜி வசதி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Moto ஜி 5ஜி மாடலில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர், OLED டிஸ்ப்ளே, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும்

லெனோவோவின் மோட்டோரோலா கெய்வ் எனும் குறியீட்டு பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி சீரிஸ் மாடலாக இருக்கலாம் என்றும் இதில் 5ஜி வசதி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
 
இத்துடன் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்களும் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய மோட்டோ ஜி 5ஜி மாடலில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர், OLED டிஸ்ப்ளே, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

புதிய மோட்டோ ஜி 5ஜி மாடல் XT2 113-2 மற்றும் XT2 113-3 எனும் மாடல் நம்பர்களுடன் இரண்டு வேரியண்ட்களில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி இரண்டாவது சென்சார் மற்றும் 2 எம்பி சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது. வெளியீட்டின் போது மோட்டோ ஜி 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :