மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யுனைட் 3 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யுனைட் 3 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது
HIGHLIGHTS

வெளியிடப்பட்டுள்ள மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யுனைட் 3, அண்ட்ராய்ட் 5.0, நான்கு உள்ளக மைய செயலி மற்றும் 10 பிராந்திய மொழிகளுக்கு ஆதரவு போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

மைக்ரோமேக்ஸ், கேன்வாஸ் யுனைட் 3 ஸ்மார்ட் கைப்பேசியை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் ரூ. 6,569- க்கு வெளியிட்டுள்ளது. இந்த கைப்பேசியில் உள்ள யுனைட் மெசெஜிங் சர்விஸ், நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ‘ஸ்வைப்’ அம்சத்தொடு வருவதால், உபயோகிப்பாளர்கள் எந்த மொழிக்கும் மொழிபெயர்ப்போ, ஒலிப்பெயர்ப்போ செய்ய இயலும். கேன்வாஸ் யுனைட் 3 இணைய வர்த்தக தளமான இன்ஃபிபீம்.காம்-இல் ஏற்கனவே கிடைக்கிறது. 

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யுனைட் 3, 480 x 800  படவரைபுள்ளி ரெசொலுஷன் கொண்ட 4.7  அங்குல ஐபிஎஸ் காட்சித்திரை கொண்டுள்ளது. இது அண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டிருப்பதோடு, 1 ஜிபி தற்காலிக நினைவகம் உடன் கூடிய 1.3 GHz நான்கு உள்ளக செயலியுடன் திகழ்கிறது. கைப்பேசியுடன் வரும் 8 ஜிபி உள் நினைவகத்தை,மைக்ரோஎஸ்டி கார்ட் பள்ளம் வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கம் செய்யலாம். கேன்வாஸ் யுனைட் 3-இல் எல்ஈடி மின்வெட்டோளியுடன் கூடிய தானே குவிமையப்படுத்தும், 8 எம்பி பின்பக்க கேமராவும், வீடியோ அழைப்புகளுக்கான 2எம்பி முன்பக்க கேமராவும் உள்ளன. இரு-சிம் ஆதரவு, 3ஜி, வை-ஃபை, ப்ளுடூத் 4.0 , ஜிபிஎஸ் போன்ற வெளித்தொடர்பு இணைய வசதி தெரிவுகள், கேன்வாஸ் யுனைட் 3 கைப்பேசியில் உள்ளன. கைப்பேசிக்கு துணைசெய்யும் 2000 எம்ஏஹெச் பேட்டரி,குரல் அழைப்புகளுக்கு 8 மணி நேர ஆதரவும், பொதுவாக அழைப்புகள் ஏற்பதற்கு 220 மணி நேர  ஆதரவும் அளிக்கும் என நிறுவனம் கூறுகிறது. மைக்ரோமேக்ஸ் யுனைட் 3, வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் கிட்டுகிறது. 

இந்திய பிராந்திய மொழிகளுக்கான ஆதரவு இந்த கைப்பேசியில் முன் நிறுவப்பட்டுள்ளது. கைப்பேசியில் உள்ள புது அம்சம் கொண்டு, உபயோகிப்பாளர்கள் ஆங்கிலத்தில் உள்ள ஒரு செய்தியை, தங்களுக்கு விருப்பமான எந்த மொழியிலும், மொழிபெயர்த்து கொள்ளலாம். பிற மொழிகளில் இருந்து ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கலாம். மேலும் உபயோகிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் தட்டச்சலாம், உரையாடலாம், கைப்பேசியின் பட்டியல் மொழியை மாற்றலாம். ஸ்மார்ட் கைப்பேசியின் ‘ஸ்வைப்’ அம்சம், ஃபர்ஸ்ட் டச் ஆதரவுடன் வருகிறது. ஃபர்ஸ்ட் டச், காப்புரிமை பெற்ற, மாட்ரா மற்றும் வார்த்தை முன்கணிக்கும் அம்சம் கொண்ட பிராந்திய விசைப்பலகையை பயன்படுத்துகிறது. மேலும் பிராந்திய மொழிகளில் உள்ள இதன் ஆப் பஜார் கொண்டு, உபயோகிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பமான பிராந்திய மொழிகளில், 10,000-க்கும் மேற்பட்ட பயன்பாடுகளை தரவிறக்கலாம். மேலும் இது கொண்டு ஒலி துணை ஆதரவோடு, உள்ளுணர்வு சார்ந்து இயங்கும் பிராந்திய மொழிப்பட்டியலையும் தரவிறக்கலாம்.

மைக்ரோமேக்ஸ் யுனைட் 3, கடந்த ஆண்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற மைக்ரோமேக்ஸ் யுனைட் 2-வின் அடுத்த பதிப்பாகும்.

இந்தியாவில் விற்பனையாகும் 5 சிறந்த கைப்பேசிகளில், யுனைட் 2-வும் ஒன்று என நிறுவனம் பறை சாற்றுகிறது. வெளியிடப்பட்ட நாளில் இருந்து, இந்திய சந்தையில் 1.5 மில்லியன் கைப்பேசிகள் விற்பனையாகியுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

மைக்ரோமேக்ஸ், தனது கேன்வாஸ் டூடில் வரிசையில், நான்காவது கைப்பேசியாக, கேன்வாஸ் டூடில் 4-ஐ, ரூ. 9,499 -க்கு, இந்த வார துவக்கத்தில் சத்தமில்லாமல் வெளியிட்டுள்ளது.இந்த ஸ்மார்ட்கைப்பேசி  720 x 1280  படவரைப்புள்ளி ரெசொலுஷன் உடன் கூடிய 6-அங்குல உயர் வரையறை காட்சித்திரையோடு வருகிறது. அதன் முன் பதிப்புகளை போலவே இதிலும் ஒரு எழுத்தாணி உள்ளது.இது 1ஜிபி தற்காலிக நினைவகம் உடன் கூடிய 1.3 GHz நான்கு உள்ளக மைய செயலியொடு வருவதோடு, மைக்ரோ எஸ்டி கார்ட் பள்ளம் வழியாக விரிவாக்கம் செய்யக்கூடிய  8 ஜிபி உள் நினைவகம் கொண்டுள்ளது. இது அண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் இயங்கிறது. 8 எம்பி பின் பக்க கேமராவும், 2 MP முன்-பக்க கேமராவும் கொண்டுள்ளது. ஒரு சமயத்தில் ஒரு சிம் பயன்பாடு அளிக்கும் இரு சிம் ஆதரவு, 3ஜி, ப்ளுடூத், வை-பை மற்றும் ஜிபிஎஸ் ஆதரவு ஆகியவை இதில் உள்ளன. கேன்வாஸ் டூடில் 3000எம்ஏஹெச் பேட்டரியுடன் வருகிறது.

Silky Malhotra

Silky Malhotra

Silky Malhotra loves learning about new technology, gadgets, and more. When she isn’t writing, she is usually found reading, watching Netflix, gardening, travelling, or trying out new cuisines. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo