Micromax In Note 2 ப்ளாக்ஷிப் டிஸைனுடன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் 4ஜிபி ரேம் உடன் ஒரே ஒரு மாறுபாட்டுடன் வருகிறது மற்றும் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G95 SoC (MediaTek Helio G95 SoC) மற்றும் 5000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 சிறப்பம்சம்

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ்  1080×2400 பிக்சல் அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 4GB ரேம், 64GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
 
புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., கனெக்டிவிட்டிக்கு 4ஜி எல்.டி.இ., வை-பை, ப்ளூடூத்  5, யு.எஸ்.பி. டைப் சி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் பிளாக மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது. 

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 விலை தகவல் :-

இந்தியாவில் புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 விலை ரூ. 13,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜனவரி 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 12,490 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :