Mi A2 சிகப்பு கலர் ஸ்மார்ட்போனும் அறிமுகம்…!

Mi A2 சிகப்பு கலர்  ஸ்மார்ட்போனும் அறிமுகம்…!
HIGHLIGHTS

சியோமி நிறுவனத்தின் Mi A2 ஸ்மார்ட்போன் ரெட் எடிஷன் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் அறிமுகமான சமயத்தில் Mi A2 பிளாக், கோல்டு மற்றும் புளு நிற வேரியன்ட்களை கொண்டிருந்தது

சியோமி நிறுவனத்தின் Mi A2 ஸ்மார்ட்போன் ரெட் எடிஷன் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் அறிமுகமான சமயத்தில் Mi A2 பிளாக், கோல்டு மற்றும் புளு நிற வேரியன்ட்களை கொண்டிருந்தது. புதிய சிவப்பு நிற ஸ்மார்ட்போனின் பெசல்கல் கருப்பு நிறம் கொண்டிருக்கின்றன. சியோமி Mi A2 மாடலின் புளு மற்றும் கோல்டு கலர் வேரியன்ட்களில் வெள்ளை நிற பெசல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 

சியோமி Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75, சோனி IMX486 சென்சார், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், 20 எம்பி சோனி IMX376 செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Mi A2 ஸ்மார்ட்போனில் தற்சமயம் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருந்தாலும், இந்த ஆண்டிற்குள் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதள அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி டிசைன் கொண்டுள்ளது Mi A2 பின்புறம் பிங்காரப்ரின்ட் சென்சார், USB டைப்-சி ஆடியோ மற்றும் 3010 Mah . பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது..

சியோமி Mi A2 சிறப்பம்சங்கள்

– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல், EIS
– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்
– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3010 Mah . பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 4+

சியோமி Mi A2 ஸ்மார்ட்போன் ரெட் எடிஷன் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய MiA2 ஸ்மார்ட்போன் Mi.com மற்றும் அமேசான் வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo