Meizu M6 ஸ்மார்ட்போன் அறிமுகமானது

HIGHLIGHTS

Meizu நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Meizu M6 ஸ்மார்ட்போன் அறிமுகமானது

Meizu நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அந்நிறுவனம் அறிமுகம் செய்த எம்5 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய எம்6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

5.2இன்ச் ஹெச்டி 2.5D வளைந்தி கிளாஸ் ஸ்கிரீன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் 64-பிட் மீடியாடெக் MT6750 பிராசஸர், ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் மற்றும் ஃப்ளைம்ஓஎஸ் 6 (FlymeOS 6) இயங்குதளம், 13 எம்பி பிரைமரி கேமரா, 4-கலர் RGBW ஃபிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பாலிகார்போனேட் பாடி, மெட்டல் ஃபிரேம் மற்றும் மெட்டாலிக் கோடுகளை கொண்டிருக்கும் எம்6 ஸ்மார்ட்போனின் ஹோம் பட்டனில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனினை 0.2 நொடிகளில் அன்லாக் செய்யக்கூடிய கைரேகை சென்சார், 4ஜி வோல்ட்இ சப்போர்ட் மற்றும் 3070 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Meizu M6 சிறப்பம்சங்கள்:

– 5.2 இன்ச் 1280×720 பிக்சல் ஹெச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் MT6750 பிராசஸர்
– மாலி T860 GPU
– 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் மற்றும் ஃப்ளைம் ஓஎஸ் 6.0
– 13 எம்பி பிரைமரி கேமரா, 4-கலர் RGBW ஃபிளாஷ், PDAF, f/2.2
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3070 எம்ஏஹெச் பேட்டரி

Meizu M6 ஸ்மார்ட்போன் பிளாக், சில்வர், புளு மற்றும் கேல்டு என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மெய்சு எம்6 இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.7,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo