LG யின் புதிய ஸ்மார்ட்போன் ரெயின்டிராப் கேமராவுடன் உருவாகிறது.

LG யின் புதிய ஸ்மார்ட்போன் ரெயின்டிராப் கேமராவுடன் உருவாகிறது.
HIGHLIGHTS

புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி ஜி சீரிஸ் மாடல்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகிறது.

LG நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலின் வரைபடங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. வரைபடங்களின் படி புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்கள் மிக எளிமையான வடிவமைப்பு, முன் மற்றும் பின்புறங்களில் சிமெட்ரிக்கல் வளைவுகள் மற்றும் ரெயின்டிராப் கேமரா உள்ளிட்டவற்றை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

புதிய வடிவமைப்பு ஸ்மார்ட்போன் சந்தையில் புதிதாக இருக்கும் என எல்ஜி தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் பின்புறத்தின் மேல் இடதுபுறத்தில் மூன்று பிரைமரி கேமரா சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் யூனிட் அளவுகள் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவை பார்க்க ரெயின் டிராப் போன்று காட்சியளிக்கின்றன.
 
LGயின் புதிய ஸ்மார்ட்போன் 3டி ஆர்க் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே ஓரங்களில் வளைக்கப்பட்டு இருக்கின்றன. இவை முந்தைய எல்ஜி ஸ்மார்ட்போன்களை விட மிக தத்ரூபமான அனுபவத்தை வழங்குகின்றன. மேலும் இது ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் அனுபவத்தை மென்மையானதாகவும் மாற்றும்.

இதுபோன்ற கேமரா அமைப்பை வழங்கும் போது, குறைவான இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போனின் பின்புறம் அழகாகவும், ஒட்டுமொத்தமாக மெல்லிய தோற்றத்தையும் வழங்கும் என எல்ஜி தெரிவித்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி ஜி சீரிஸ் மாடல்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இதர விவரங்களை எல்ஜி வழங்கவில்லை. எனினும், எல்ஜி புதிதாக பிரீமியம் சாதனம் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இது ஃபிளாக்ஷிப் ரக சிறப்பம்சங்கள் மற்றும் 5ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo