LG யின் W11 W31 மற்றும் W31-Plus மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானது.

HIGHLIGHTS

LG நிறுவனம் இந்திய சந்தையில் W11 W31 மற்றும் W31-Plus என மூன்று ஸ்மார்ட் போன் மாடல்களை அறிமுகம்

LG டபிள்யூ31 மாடலில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது

LG விலை ரூ. 9490, ரூ. 10,990 மற்றும் ரூ. 11,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது

LG  நிறுவனம் இந்திய சந்தையில் W11  W31 மற்றும் W31-Plus என மூன்று ஸ்மார்ட் போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. 
 
இவற்றில் 6.52 இன்ச் HD பிளஸ் புல் விஷன் ஸ்கிரீன், 8 எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கின்றன.

எல்ஜி டபிள்யூ31 மாடலில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று டபிள்யூ சீரிஸ் மாடல்களிலும் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

எல்ஜி W11  W31 மற்றும் W31-Plus  மாடல்களில் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. எல்ஜி டபிள்யூ11 மாடலில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் எல்ஜி டபிள்யூ11, டபிள்யூ31 மற்றும் டபிள்யூ31 பிளஸ் மாடல்கள் மிட்நைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9490, ரூ. 10,990 மற்றும் ரூ. 11,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :