எல்ஜி ஜி7 தின்க் அதிரடி அம்சங்களுடன் எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 04 May 2018
HIGHLIGHTS
  • எல்ஜி ஏற்கனவே அறிவித்ததை போன்று தனது ஜி7 தின்க் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

எல்ஜி ஜி7 தின்க் அதிரடி அம்சங்களுடன் எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்

எல்ஜி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் QHD பிளஸ் 19:5:9 ஃபுல் விஷன் எல்சிடி சூப்பர் பிரைட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே கொண்டு நேரடி சூரிய வெளிச்சத்திலும் ஸ்மார்ட்போனினை எவ்வித சிரமமும் இன்றி இயல்பாக பயன்படுத்த முடியும். 

புதிய ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் முந்தைய எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனினை விட கிட்டத்தட்ட 50% மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது. எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 6 ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, சூப்பர் வைடு ஆங்கிள் கான்ஃபிகரேஷன்களை கொண்டுள்ளது. இதன் வைடு ஆங்கிள் கேமரா லேன்ட்ஸ்கேப்களை  மிக நேர்த்தியாக படம்பிடிக்கிறது. 

முந்தைய எல்ஜி ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது புதிய ஸ்மார்ட்போனின் கேமராக்கள் செல்ஃபிக்களை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் பிரதிபலிக்கிறது. செல்ஃபிக்களை எடுக்க புதிய ஜி7 தின்க் ஸ்மார்ட்போனில் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருக்கும் ஏஐ கேம் (AI CAM) அம்சம் கொண்டு 19 வெவ்வேறு மோட்களில் புகைப்படங்களை எடுக்க முடியும். புதிய சூப்பர் பிரைட் கேமரா வழக்கமான புகைப்படங்களை விட அதிக தெளிவாகவும், குறைந்த வெளிச்சத்தில் எடுக்கும் போதும் துல்லியமான படங்களை வழங்குகிறது. குறைந்த வெளிச்சத்தில் புகைப்படங்களை எடுக்கும் போது இதில் உள்ள ஏஐ அல்காரிதம் கேமரா செட்டிங்-களை தானாக மாற்றியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் லைவ் போட்டோ மோட் புகைப்படங்களை ஷட்டரை தட்டுவதற்கு ஒரே நொடி முன்பாகவே புகைப்படங்களை படமாக்க துவங்கி விடும், இவ்வாறு செய்யும் போது எதிர்பார்க்க முடியாத காட்சிகள் கேமராவில் படமாக்கப்படும். இத்துடன் புகைப்படங்களில் கூடுதலாக சேர்க்க 2D அல்லது 3D ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போனில் உள்ள கிளாஸ் பேக் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் பாலிஷ் செய்யப்பட்ட மெட்டல் ரிம், IP68 சான்று உள்ளிட்டவை ஸ்மார்ட்போனிற்கு தூசு மற்றும் தண்ணீர் மூலம் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. 

பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் சூப்பர் ஃபார் ஃபீல்டு குரல் அங்கீகார வசதி (Super Far Field Voice Recognition) உங்களது குரலை குறிப்பிட்ட அறையில் எங்கிருந்து பேசினாலும் புரிந்து கொள்ளும் திறன் கொண்டுள்ளது. பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் மற்ற ஸ்மார்ட்போன்களை விட அதிக ஒலியை அதிக தரத்தில் வழங்குகிறது. இத்துடன் DTS:X தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் 3D சவுண்டு வழங்குவதோடு, இயர்போன்களில் அதிகபட்சம் 7.1 சேனல் ஆடியோ வழங்குகிறது. 

எல்ஜி ஜி7 தின்க் சிறப்பம்சங்கள்:

- 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல்விஷன் சூப்பர் பிரைட் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
- அட்ரினோ 630 GPU
- எல்ஜி ஜி7 தின்க் 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- எல்ஜி ஜி7 பிளஸ் தின்க் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த எல்ஜி UX
- 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.6, 71-டிகிரி வைடு ஆங்கிள் லென்ஸ்
- 16 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், f/1.9, எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, 80-டிகிரி வைடு ஆங்கிள் லென்ஸ், f/1.9
- கைரேகை சென்சார், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- வாட்டர், டஸ்ட் அசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3000 எம்ஏஹெச் பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங்

எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் புதிய பிளாட்டினம் கிரே, நியூ அரோரா பிளாக், நியூ மொராக்கன் புளு, ரேஸ்ப்பெரி ரோஸ் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. வரும் நாட்களில் புதிய எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் தென் கொரியாவிலும், இதைத் தொடர்ந்து வட அமெரிக்கா, ஐரோப்பியா, லத்தின் அமெரிக்கா மற்றும் ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Sakunthala

coooollllllllll

email

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
₹ 12999 | $hotDeals->merchant_name
Redmi 9 Power (Electric Green, 4GB RAM, 64GB Storage) - 6000mAh Battery | 48MP Quad Camera
Redmi 9 Power (Electric Green, 4GB RAM, 64GB Storage) - 6000mAh Battery | 48MP Quad Camera
₹ 10999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
₹ 15999 | $hotDeals->merchant_name
Redmi Note 9 Pro Max Interstellar Black 6GB|64GB
Redmi Note 9 Pro Max Interstellar Black 6GB|64GB
₹ 14999 | $hotDeals->merchant_name
Realme 7 Pro Mirror Silver 6GB |128GB
Realme 7 Pro Mirror Silver 6GB |128GB
₹ 19999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status