Lava Z93 AI கேமிங் அம்சத்துடன் 8000ரூபாய் பட்ஜெட்டில் அறிமுகம்

Lava Z93 AI கேமிங் அம்சத்துடன் 8000ரூபாய் பட்ஜெட்டில் அறிமுகம்

லாவா நிறுவனம் இசட்93 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய இசட்93 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் இசட்92 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய லாவா இசட்93 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, ஸ்மார்ட் ஏ.ஐ. கேமிங் மோட், ஆக்டா-கோர் பிராசஸர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விலை மற்றும் விற்பனை 
லாவா இசட்93 ஸ்மார்ட்போன் சார்கோல் புளு மற்றும் ராயல் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Lava Z93  சிறப்பம்சங்கள்

– 6.22 இன்ச் 1520×720 பிக்சல் HD .பிளஸ் 19:9 ஐ.பி.எஸ். 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். பிராசஸர்
– 650MHz IMG PowerVR GE8320 GPU
– 3 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9 பை
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஃபுல் வியூ டிஸ்ப்ளே, டியூ டிராப் நாட்ச் மற்றும் 1520×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் கேமரா சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8 வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, சாஃப்ட் ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 லெவல் ஏ.ஐ. போட்டோ ஸ்டூடியோ, ப்ரோ மோட் பானரோமா, ஏ.ஆர். ஸ்டிக்கர் மற்றும் HDR . மோட் வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo