அதிக பேக்டீரியா நிறைத்தது ஸ்மார்ட்போன் ஆராய்ச்சி யின் பகிர் தகவல்.

அதிக பேக்டீரியா நிறைத்தது  ஸ்மார்ட்போன்  ஆராய்ச்சி யின் பகிர் தகவல்.
HIGHLIGHTS

கழிவறைகளை விட பெருமளவு கிருமிகளை கொண்டிருப்பதாக சார்லஸ் தெரிவித்து இருக்கிறார்.

ஆய்வின் போது சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 25 ஸ்மார்ட்போன்களில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை ஒரு சதுர அடிக்கு 25,127 கிருமிகளை கொண்டிருப்பதாக சார்லஸ் தெரிவித்து இருக்கிறார். டெஸ்க்டாப் எனப்படும் கணினிகளில் ஒரு சதுர அடிக்கு 20,961 கிருமிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. பொதுவாக கழிவறைகளில் ஒரு சதுர அடிக்கு 49 கிருமிகளே காணப்படுகின்றன.

அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர். சார்லஸ் ஜெர்பா ஸ்மார்ட்போன்களின் மூலம் பரவும் நோய்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். ஆய்வு முடிவில் ஸ்மார்ட்போன்கள் கழிவறைகளை விட பெருமளவு கிருமிகளை கொண்டிருப்பதாக சார்லஸ் தெரிவித்து இருக்கிறார்.

இவ்வாறு ஸ்மார்ட்போன்களை சுத்தமாக வைத்துக் கொள்வது மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள, மற்றவரின் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் இருப்பதோடு உங்களது ஸ்மார்ட்போனை மற்றவரிடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என் கூறப்படுகிறது.

அந்த வகையில் கிருமிகளின் எண்ணிக்கையை வைத்தே ஸ்மார்ட்போன்கள் எந்தளவு சுத்தமாக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும். இதனால் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அங்கமாக சார்ஜ் செய்வதோடு மட்டுமின்றி அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் இந்த ஆய்வு அறிக்கை உணர்த்துகிறது.

ஸ்மார்ட்போன்கள் பற்றி அதீத சிந்தனைகள் இல்லாவிட்டாலும் அவை ஒருவரின் முக்கியத்துவம் வாய்ந்த தனிப்பட்ட சாதனம் ஆகும். எப்போதும் ஒருவரின் ஸ்மார்ட்போன் அவரது கைகள், முகம் மற்றும் வாய் அருகே அதிக நேரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போன்களில் உள்ள கிருமிகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் தான். 

மேலும் பயன்படுத்தாத நேரங்களில் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும், வெப்பமாக இருக்கும் பாக்கெட் அல்லது பர்ஸ் போன்றவற்றில் தான் வைக்கப்படுகிறது. வெப்பமான சூழல்களில்தான் கிருமிகள் வேகமாக வளரும். இதனாலேயே ஸ்மார்ட்போன்களில் எளிதில் கிருமிகள் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

ஸ்மார்ட்போன்களில் கிருமிகள் தொற்றாமல் இருக்க என்ன செய்யலாம்?

ஸ்மார்ட்போன்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அடிக்கடி கைகளை கழுவ வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஒரு நாள் பொழுதில் பலமுறை கைகளாலேயே ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனாலேயே கைகளை அடிக்கடி கழுவுதல் ஸ்மார்ட்போனை சுத்தமாக வைத்துக் கொள்வதில் முதல் படியாக இருக்கிறது.

ஸ்மார்ட்போன்களை சுத்தமாக வைத்துக் கொள்ள சந்தையில் பல்வேறு பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றில் முதன்மையான ஒன்றாக ஆல்கஹால் வைப் இருக்கின்றன. இவற்றை கொண்டு நாள் பொழுதில் கிறுமிகளை கொன்றுகுவிக்கலாம். இது அதிகளவு பயன்தரும் ஒன்றாக இருக்கிறது. 

ஆபத்து காலங்களில் காலிங்க்லி மேற்கொள்ள மற்றவரிடம் ஸ்மார்ட்போனை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் அவருக்காக அழைப்பை மேற்கொண்டு ஸ்மார்ட்போனை ஸ்பீக்கர் அல்லது ஹெட்போன் மூலம் பேச வைக்கலாம். ஸ்மார்ட்போனினை சானிடைஸ் செய்யும் போது இது பெரிய விஷயமாக இருக்காது. 

சாப்பிட அமரும் முன் ஸ்மார்ட்போன்களை வைத்துவிட்டு, கைகளை நன்கு கழுவ வேண்டும். சாப்பிட அமரும் போது ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டாம். மேலும் சாப்பிட்டு முடிக்கும் வரை ஸ்மார்ட்போனை கையில் எடுக்க வேண்டாம். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo