வெறும் ரூ,949 விலை கொண்ட போனில் AI அம்சம் Itel அறிமுகம் செய்த சூப்பர் ஃபீச்சர் போன்

HIGHLIGHTS

Itel நிறுவனம் புதிய Itel Ace 3 Heera இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த ஃபோனில், 1.8-இன்ச் டிஸ்ப்ளே, 1,000mAh பேட்டரி மற்றும் USB டைப்-சி சார்ஜிங் இருக்கும்

இந்த புதிய போனில் AI அம்சம் கொண்டிருப்பது சுவர்ச்மான்ஸ் அம்சமாகும்

வெறும் ரூ,949 விலை கொண்ட போனில் AI அம்சம் Itel அறிமுகம் செய்த சூப்பர் ஃபீச்சர் போன்

Itel நிறுவனம் புதிய Itel Ace 3 Heera இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபோனில், 1.8-இன்ச் டிஸ்ப்ளே, 1,000mAh பேட்டரி மற்றும் USB டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்நிறுவனம் இதை மூன்று கலரில் அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் ஃபீச்சர் ஃபோன் பிரிவில், இந்த புதிய ஃபோன், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா மற்றும் லாவாவின் ஃபீச்சர் ஃபோன்களுக்குக் கடுமையான போட்டியை அளிக்கக்கூடும். இந்த புதிய போனில் AI அம்சம் கொண்டிருப்பது சுவர்ச்மான்ஸ் அம்சமாகும் நாம் வேறு என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று பார்ப்போம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Itel Ace 3 Heera விலை தகவல்.

ஐடெல் ஏஸ் 3 ஹீரா இந்தியாவில் வெறும் ரூ,949 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் ஊதா ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும், மேலும் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் இதன் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இந்த ஃபோனுடன், நிறுவனம் ஓராண்டு கால மாற்றுச் சலுகையையும் வழங்குகிறது. அதாவது, இந்தக் காலக்கட்டத்தில் ஃபோனில் ஏதேனும் உற்பத்திக் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அதை மாற்றிக்கொள்ளலாம். ஐடெல் ஏஸ் 3 ஹீரா என்பது ஐடெல் ஏஸ் 2 ஹீராவின் புதிய பதிப்பாகும், இதன் விலை ₹1,109 ஆகும்.

Itel Ace 3 Heera-சிறப்பம்சங்கள்.

Itel Ace 3 Heera ஒரு கீபோர்ட் போன ஆகும் இந்த ஃபீச்சர் ஃபோனில், நிறுவனம் 1.8-இன்ச் TFT டிஸ்ப்ளேவை வழங்கியுள்ளது. இதில் 1,000mAh பேட்டரி உள்ளது. மேலும், இந்த ஃபோனில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் இயங்கும் பேட்டரி மேனேஜ்மென்ட் அமைப்பு இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. ஃபோனை முழுமையாக சார்ஜ் செய்தவுடன், சுமார் 10 மணி நேரம் தொடர்ச்சியாக கால்களை மேற்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, இந்த ஃபோன் 177 மணிநேர ஸ்டாண்ட்பை நேரத்தை வழங்குகிறது. குறைந்த பவர் உடன் உங்கள் ஃபோன் ஸ்விட்ச் ஆகாமல் போவதைத் தடுக்கும் சூப்பர் பேட்டரி மோட் என்ற அம்சத்தையும் இந்த ஃபீச்சர் ஃபோனில் நிறுவனம் சேர்த்துள்ளது.

இதையும் படிங்க :7050mAh பேட்டரி உடன் Vivo புதிய போன் அறிமுகம், விலை அம்சங்கள் பாருங்க

ஐடெல் ஏஸ் 3 ஹீரா, USB டைப்-சி மற்றும் ப்ளூடூத் வழியாக கனெக்ஷன் வசதியை வழங்குகிறது. இதன் உள்ளக நினைவகத்தை மெமரி கார்டு மூலம் 32GB வரை அதிகரிக்க முடியும். இந்த ஃபோனில் கால் ரெக்கார்டிங் மற்றும் FM ரேடியோ வசதிகள் உள்ளன. இதில் 500 தொடர்புகளையும் 250 செய்திகளையும் சேமிக்க முடியும். இந்த ஃபீச்சர் ஃபோனில், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை சப்போர்ட் செய்யும் குரல் உதவியாளரையும் நிறுவனம் வழங்கியுள்ளது. இது 10 பிற இந்திய மொழிகளையும் சப்போர்ட் செய்கிறது .

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile