IQOO U1X ஸ்மார்ட்போன் ஸ்னாப்ட்ரகன் 662 SOC மற்றும் ட்ரிபிள் கேமராவுடன் அறிமுகம்.

IQOO U1X  ஸ்மார்ட்போன் ஸ்னாப்ட்ரகன் 662 SOC மற்றும் ட்ரிபிள் கேமராவுடன் அறிமுகம்.
HIGHLIGHTS

சீனாவில் அறிமுகமானது iQoo U1x

அதிரடியான பேட்டரியுடன் வருகிறது iQoo U1x

இந்த போனின் ஆரம்ப விலை CNY 899 (சுமார் Rs 10,000) இருக்கிறது.

iQoo U1x இது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் iQoo U1 இன் குறைந்த மாறுபாடாக வந்துள்ளது. இந்த சாதனம் ஆக்டா கோர் செயலி, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஒரு நாட்ச் செல்பி கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போன் இரண்டு வண்ணங்கள் மற்றும் மூன்று ரேம் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. IQoo U1x மெல்லிய பெசல்களைக் கொண்டுள்ளது மற்றும் திக்  சின் உடன் வருகிறது. சாதனத்தில் ஒரு பெரிய பேட்டரி மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் காண்பீர்கள்.

IQOO U1X விலை 

புதியIQOO U1X ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை 899 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 9930, 6 ஜிபி + 64 ஜிபி மாடல் 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 11,035 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 1199 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 13,245 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

IQOO U1X  சிறப்பம்சங்கள்

– 6.51 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
– ஆக்டாகோர் குவால்காம் 662 பிராசஸர்
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யுஐ 1.0
– டூயல் சிம்
– 13 எம்பி பிரைமரி கேமரா
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 8 எம்பி செல்பி கேமரா
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் டூயல் என்ஜின் பிளாஷ் சார்ஜ்

 IQOO U1X  6.51 இன்ச் HD பிளஸ் LCD ஸ்கிரீன், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் ஐகூ யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000Mah பேட்டரி மற்றும் 18 வாட் டூயல் என்ஜின் பிளாஷ் சார்ஜ் வழங்கப்பட்டு உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo