அறிமுகமான 2மாதங்களில் 4000 வரை விலையை குறைத்த முதல் 5G போன் IQOO தான் .

அறிமுகமான 2மாதங்களில் 4000 வரை விலையை குறைத்த முதல் 5G போன் IQOO தான் .
HIGHLIGHTS

ஐகூ 3 சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 4 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் IQOO  பிராண்டு தனது முதல் ஸ்மார்ட்போனாக ஐகூ 3 மாடலை 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில் வெளியிட்டது. இந்தயாவில் இதன் விலை ரூ. 36,990 முதல் துவங்கியது. பின் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ஐகூ விலை உயர்த்தப்பட்டு ரூ. 38,990 ஆக மாற்றப்பட்டது.

தற்சமயம் ஐகூ 3 4ஜி 8ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 34,990 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 34,990 என மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று ஐகூ 3 5ஜி 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 44,990 என மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐகூ 3 சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 4 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது.

IQOO  / IQOO  3 5ஜி சிறப்பம்சங்கள்:

– 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20:9 E3 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
– அட்ரினோ 650 GPU
– 8 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. (UFS 3.1) மெமரி 
– 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. (UFS 3.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யு.ஐ. 1.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
– 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.46
– 13 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.45
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4440 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 55 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ்

ஐகூ 3 மற்றும் ஐகூ 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் வொல்கானோ ஆரஞ்சு, குவாண்டம் சில்வர், டொர்னாடோ பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

குறைக்கப்பட்ட புதிய விலை ஐகூ பிராண்டின் இ-ஸ்டோரில் மாற்றப்பட்டுள்ளது. எனினும், தற்சமயம் அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்பதால், இதனை தற்சமயம் வாங்க முடியும். ஊரடங்கு நிறைவுற்றதும், மாற்றப்பட்ட விலை ப்ளிப்கார்ட் தளத்திலும் அப்டேட் செய்யப்படலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo