iQoo 10 சீரிஸ் அறிமுகம் 200W பிளாஷ் சார்ஜிங் கொண்டிருக்கும்.

iQoo 10 சீரிஸ் அறிமுகம் 200W பிளாஷ் சார்ஜிங் கொண்டிருக்கும்.
HIGHLIGHTS

iQoo தனது புதிய முதன்மை ஸ்மார்ட்போனான iQoo 10 சீரிஸை உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இரண்டு போன்களும் Qualcomm Snapdragon 8+ Gen 1 செயலி மற்றும் Android 12 அடிப்படையிலான OriginOS Ocean உடன் வருகின்றன

இந்த ஃபோன் 2K டிஸ்ப்ளேவுடன் 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் HDR10 பிளஸ் ஆதரவுடன் வருகிறது

சீன ஸ்மார்ட்போன் பிராண்டான iQoo தனது புதிய முதன்மை ஸ்மார்ட்போனான iQoo 10 சீரிஸை உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடரின் கீழ், iQoo iQoo 10 மற்றும் iQoo 10 Pro ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு போன்களும் Qualcomm Snapdragon 8+ Gen 1 செயலி மற்றும் Android 12 அடிப்படையிலான OriginOS Ocean உடன் வருகின்றன. iQoo 200W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் இது என்று கூறுகிறது. இந்த ஃபோன் 2K டிஸ்ப்ளேவுடன் 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் HDR10 பிளஸ் ஆதரவுடன் வருகிறது. iQoo 10 தொடரின் அம்சங்கள், விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்…

iQoo 10 Series யின் விலை 

iQoo 10 ஆனது கருப்பு, ஆரஞ்சு மற்றும் லெஜண்டரி எடிஷன் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. iQoo 10 இன் 8 ஜிபி ரேம் கொண்ட 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை 3,699 யுவான் (தோராயமாக ரூ. 44,000) மற்றும் 12 ஜிபி ரேம் கொண்ட 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை 4,699 யுவான் (தோராயமாக ரூ. 56,00) ஆகும்.

iQoo 10 Pro இரண்டு கலர் வேரியண்ட்டில் கிடைக்கிறது, கருப்பு, லெஜண்டரி பதிப்பில் வெளியிடப்பட்டது. இந்த போனின் 8 ஜிபி ரேம் கொண்ட 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை 4,999 யுவான் (சுமார் ரூ. 60,000) மற்றும் 12 ஜிபி ரேம் கொண்ட 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை 5,999 யுவான் (சுமார் ரூ.72,000).

iQoo 10 Series சிறப்பம்சம்.

iQOO 10 ஆனது (1,080 x 2,400) பிக்சல் ரெஸலுசன் மற்றும் 120Hz அப்டேட் வீதத்துடன் 6.78-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் காட்டுகிறது. இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான OriginOS Ocean இல் வேலை செய்கிறது. iQOO 10 ஆனது Qualcomm இன் சமீபத்திய Snapdragon 8+ Gen 1 ப்ரோசெசர் , 12 GB LPDDR5 ரேம் மற்றும் 512 GB வரை UFS 3.1 ஸ்டோரேஜை வழங்குகிறது.

iQOO 10 Pro ஆனது (1,440×3,200) பிக்சல் ரெஸலுசன் , HDR10+ ஆதரவு மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.78-இன்ச் 2K E5 LTPO டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான OriginOS Ocean இல் வேலை செய்கிறது. iQOO 10 ஆனது Qualcomm இன் சமீபத்திய Snapdragon 8+ Gen 1 செயலி மற்றும் V1+ இமேஜிங் சிப் உடன் வருகிறது. இந்த ஃபோன் 12 GB LPDDR5 ரேம் மற்றும் 512 GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ்கயும் வழங்குகிறது.

iQOO 10 ஆனது 4,700mAh டூயல் செல் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 120W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இந்த போனின் எடை 207 கிராம்.

iQOO 10 Pro ஆனது 4,700mAh டூயல் செல் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 200W Flash Wire ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் போனில் உள்ளது. இந்த போனின் எடை 216 கிராம். அல்ட்ராசோனிக் 3டி வைட் ஏரியா கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சங்களும் போனில் உள்ளன.

இணைப்பிற்காக, iQoo 10 தொடரின் இரண்டு போன்களிலும் 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth v5.3, GPS / A-GPS மற்றும் USB Type-C போர்ட் உள்ளது.
 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo