IPHONE 11 அறிமுகத்திற்கு பிறகு IPHONES யின் விலைகள் குறைக்கப்பட்டது.

IPHONE 11  அறிமுகத்திற்கு  பிறகு IPHONES யின் விலைகள் குறைக்கப்பட்டது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. அதன் பிறகு இதே நிகழ்வில் ஐபோன் அறிவிப்புகளுடன் ஐபோன் XR, ஐபோன் 8 சீரிஸ் உள்ளிட்டவற்றின் விலைகளை குறைப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய விலை குறைப்பு இந்தியாவிலும் அமலாகியிருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் XR விலை குறைக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகளால் விலை குறைக்கப்பட்டிருந்தது. தற்சமயம் ஐபோன் XR 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. மாடல்களின் விலை ரூ. 27,000 குறைக்கப்பட்டுள்ளது.

ஐபோன் X சீரிஸ் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஐபோன்கள் தவிர ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடலின் விலை ரூ. 8000 குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை ஏற்கனவே கடந்த ஆண்டும் குறைக்கப்பட்டது. 

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் 64 ஜி.பி. வெர்ஷன்களின் விலை ரூ. 20,000 குறைக்கப்பட்டது. முன்னதாக இவற்றின் விலை கடந்த ஆண்டும் குறைக்கப்பட்டிருந்தது. ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் 128 ஜி.பி. மாடல்கள் புதிதாக அறிமுகமாகியிருக்கிறது. ஐபோன் 7 சீரிஸ் மாடலின் விலையும் குறைக்கப்பட்டிருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile