iphone 16 போனில் அதிரடி ஆபர் வெறும் ரூ,76,400 யில் வாங்கலாம்.

iphone 16 போனில் அதிரடி ஆபர் வெறும் ரூ,76,400 யில் வாங்கலாம்.

iphone 16 வரிசை இந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிளின் பழைய ஐபோன் மாடல்கள் பெரும்பாலும் பெரிய தள்ளுபடியில் விற்கப்படுகின்றன, ஆனால் தற்போது நீங்கள் முதன்மையான ஐபோன் 16 ஐ பெரிய தள்ளுபடியுடன் வாங்க வாய்ப்பு உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அங்கீகரிக்கப்பட்ட ஆப்பிள் மறுவிற்பனையாளர் சமீபத்திய ஐபோன் மாடல்களில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. பிளாட் ஆஃப் விலையுடன், கஸ்டமர்கள் ஐபோன் 16 யின் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை மற்ற வகைகளுடன் குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

iphone 16 விலை மற்றும் டிஸ்கவுன்ட் ஆபர்.

தற்போது, ​​ஐபோன் 16 யின் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல், இமேஜின் ஸ்டோரில் ரூ.76,400க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , இது அதன் அசல் விலையான ரூ.79,990ஐ விட ரூ.3,500 குறைவாகும். இது மட்டுமின்றி, கஸ்டமர்கள் கோடக் மஹிந்திரா பேங்க் , ICICI பேங்க் அல்லது SBI பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால், ரூ.5,000 கேஷ்பேக் கிடைக்கும். இந்த சலுகை 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளிலும் அனைத்து கலர் விருப்பங்களுக்கும் பொருந்தும்.

இதுமட்டுமின்றி பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்கள் கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம். இ-ஸ்டோரில் கிடைக்கும் தகவல்களின்படி, வாடிக்கையாளர்கள் தங்களது பழைய சாதனத்தை மாற்றிக் கொண்டால், அவர்களுக்கு போனஸ் தள்ளுபடியாக ரூ.8,000 கிடைக்கும். பரிமாற்றம் Cashify மூலம் நடக்கும். இந்த பினின் இறுதி மதிப்பு அதன் நிலைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும். இருப்பினும், விலைத் தள்ளுபடிகள், வங்கி அட்டை சலுகைகள் மற்றும் போனஸ் தள்ளுபடிகள் ஆகியவற்றைச் சேர்த்தால், கஸ்டமர்கள் ஐபோன் 16 ஐ ரூ.16,500 வரை குறைவாக வாங்க வாய்ப்பு உள்ளது.

iphone 16 சிறப்பம்சம்..

இதன் சிறப்பம்சங்கள் பற்றி பற்றி பேசுகையில், ஐபோன் 16 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2000 நிட்கள் வரை ஹை ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது . இந்த ஐபோன் octa-core A18 சிப்செட்டில் வேலை செய்கிறது. இந்த ஐபோன் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பிற்காக IP68 தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன் 16 இயக்க முறைமையின் அடிப்படையில் iOS 18 யில் இயங்குகிறது. கேமரா செட்டிங்கிர்க்காக , iPhone 16 இன் பின்புறம் f/1.6 அப்ரட்ஜர் மற்றும் 2x இன்-சென்சார் ஜூம் கொண்ட 48-மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் f/1.6 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் 2x டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்புறத்தில் 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா உள்ளது. இந்த ஐபோனில் USB Type C போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கனெக்சன் விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத், GPS மற்றும் NFC ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க:Realme புதிய போன் வேகன் லெதர் பினிஷ் உடன் விரைவில் வரும் எப்போ பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo