Digit.in

எந்த வெப்சைட் திறந்தாலும் ஹேக் ஆகும், iPhone பயனர்களை எச்சரித்த டெலிக்ராம் CEO காரணம் என்ன பாருங்க

Highlights

ஐபோன் பயனர்களுக்கு மிக பெரிய ஆபத்து நெருங்கி வருகிறது எச்சரித்த டேலேக்ராம் CEO

ஹேக்கர்கள் பழைய ஆப்பிளின் IOS பயனர்களை குறிவைப்பதாக எச்சரித்துள்ளார்.

டெலிக்ராம் தனது பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்ப ஆரம்பித்தது IOS பழைய வெர்ஷன் பயன்படுதுவோர்களுக்கு

எந்த வெப்சைட் திறந்தாலும் ஹேக் ஆகும், iPhone பயனர்களை எச்சரித்த டெலிக்ராம் CEO காரணம் என்ன பாருங்க

நீங்கள் Apple iPhone வைத்திருந்தால், எச்சரிக்கையாக இருக்கவும், ஏன் என்றால் ஐபோன் பயனர்களுக்கு மிக பெரிய ஆபத்து நெருங்கி வருகிறது டெலிகிராமின் நிறுவனர் CEO மற்றும் (Founder) பாவெல் துரோவ் ஐபோன் பயனர்களை எச்சரித்துள்ளார். அதில் அவர் ஹேக்கர்கள் பழைய ஆப்பிளின் IOS பயனர்களை குறிவைப்பதாக எச்சரித்துள்ளார். ஹேக்கர்கள் பயனர்களை ஒரு அபாயகரமான இணையதளத்திற்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவர்களின் தனிப்பட்ட டேட்டாகளைத் திருடக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்; மேலும், ஒரு மேல்வேர் வெப்சைட் திறப்பதன் மூலமே ஐபோனைப் பயனர்களை ஹேக் செய்ய முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.டெலிக்ராம் தனது பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்ப ஆரம்பித்தது IOS பழைய வெர்ஷன் பயன்படுதுவோர்களுக்கு ஆபத்து என குறிப்பிட்டுள்ளது.

இந்த ஒரே ஒரு வெப்சைட் திறந்தாள் உங்கள் ஐபோன் ஹேக் ஆகும்.

ஐபோன் பயனர்கள் பெருமளவில் ஹேக் செய்யப்படுகிறார்கள் என்று X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் டுரோவ் கூறியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, ஒரு வேசைட்டை திறப்பது மட்டுமே ஒரு ஐபோனை ஹேக் செய்யப் போதுமானதாக இருக்கலாம். "ஐபோன் பயனர்கள் பெருமளவில் ஹேக் செய்யப்படுகிறார்கள். உங்கள் iOS வெர்ஷன் சற்றேனும் பழையதாக இருந்தால், உங்கள் டேட்டாக்கள் அனைத்தும் ஆபத்தில் உள்ளன. ஒரு வெப்சைட்டை திறப்பதன் மூலமே நீங்கள் ஹேக் செய்யப்படலாம்," என்று அவர் X தளத்தில் எழுதியுள்ளார்.

டெலிகிராம் தனது ஆப் மூலம் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு எச்சரிக்கைகளை அனுப்பி, தங்களது ஐபோன் சாப்ட்வேர் சமீபத்திய வேர்ஷனிர்க்கு அப்டேட் செய்யுமாறு அவர்களை வலியுறுத்துகிறது. பழைய ஒப்பரேட்டிங் சிஸ்டமில் ளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள், வெப்சைட் குற்றவாளிகள் எளிதில் நுழைவதற்கான ஒரு வழியாக மாறக்கூடும் என்பதை இந்த எச்சரிக்கை எடுத்துக்காட்டுகிறது.

மேல்வேர் வெப்சைட் எப்படி தாக்குதல் செய்கிறது?

அறிக்கையின்படி, ஹேக்கர்கள் பழைய ஒப்பரேட்டிங் சிஸ்டமில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள, மேல்வேர் வெப்சைட்களையும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சைபர் தாக்குதலுக்கு பயன்படுத்தலாம். இந்தத் தாக்குதல்கள், பயனர்கள் எந்தவொரு ஆப்பையும் டவுன்லோட் செய்யாமலோ அல்லது வேண்டுமென்றே மேல்வேர் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியமின்றியோ, டிவவைஸில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான தகவல்களை அணுக அவர்களுக்கு வழிவகுக்கும்.

ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற அச்சுறுத்தல்களை முன்பே ஒப்புக்கொண்டுள்ளது. ஒரு பாதுகாப்பு ஆலோசனையில், மேல்வேர் வெப்சைட் கண்டேண்டின் மூலம் iOS-யின் பழைய வெர்ஷன்களை குறிவைக்கும் சைபர் அடிப்படையிலான தாக்குதல்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக அந்நிறுவனம் எச்சரித்தது. போனை அப்டேட் செய்ய தவறினால் , பாதுகாப்பற்ற வெப்சைட் பார்வையிடுவது அல்லது அறியப்படாத லிங்கை கிளிக் செய்வது உங்கள் தனிப்பட்ட டேட்டாகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆப்பிள் கூறியது. மேலும், கண்டறியப்பட்ட அப்டேட்களை சரிசெய்ய சாப்ட்வேர் அப்டேட்களையும் அந்நிறுவனம் வெளியிட்டதுடன், பயனர்கள் தங்கள் திவாஸ்களைப் அப்டேட் நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தியது.

ஹெக்கர்களிடம் உங்களின் ஐபோன் எப்படி பாதுகாப்பாக வைப்பது?

ஐபோன் பயனர்கள் தங்கள் ஐபோனில், அந்தந்த மாடலுக்குக் கிடைக்கும் சமீபத்திய சாப்ட்வேர் வெர்ஷன் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதைச் செய்ய, 'செட்டிங்கில் ' (Settings) என்பதற்குச் சென்று, 'பொது' (General) என்பதைத் தட்டி, 'சாப்ட்வேர் அப்டேட் ' (Software Update) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அப்டேட் ஏதேனும் இருந்தால், அதைப் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும் . பயனர்கள் இந்தப் பிரிவிலிருந்து ஆட்டோமீட்டிக் அப்டேட்களையும் இயக்கலாம். இதன் மூலம், முக்கியமான பாதுகாப்புப் அப்டேட்கள் கிடைத்தவுடன், நீங்கள் எதுவும் செய்யாமலேயே அவை தானாகவே இன்ஸ்டால் செய்யப்படும்.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles