இன்ஸ்டாகிராமில் தேவை இல்லாத ஃபாலோவர்களை நீக்கும் புதிய வசதி எப்படி இருக்கும் வாங்க பாக்கலாம்.

இன்ஸ்டாகிராமில் தேவை இல்லாத ஃபாலோவர்களை நீக்கும் புதிய வசதி  எப்படி இருக்கும் வாங்க பாக்கலாம்.
HIGHLIGHTS

புதிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகியுள்ள போதும், இன்ஸ்டாகிராம் தரப்பில் புதிய அம்சம் பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

ஆண்ட்ராய்டு இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் தங்களின் ஃபாலோவர்களை நீக்கும் அம்சத்தினை அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு செயலியில் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதை ஜேன் மன்சுன் வொங் எனும் குறியீட்டாளர் கண்டறிந்தார்.

IOS  தளத்தில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு பதிப்பிலும் சோதனை செய்யப்படுகிறது. புதிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகியுள்ள போதும், இன்ஸ்டாகிராம் தரப்பில் புதிய அம்சம் பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

இந்த அம்சத்தை இயக்க, ஃபாளோவரின் ப்ரோஃபைல் சென்று, செங்குத்தாக இருக்கும் மெனு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். பின் ஃபாளோவரை நீக்கக்கோரும் (Remove Follower) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். 

தற்சமயம் இந்த அம்சத்தினை இயக்க சொந்த ஃபாலோவர்கள் பட்டியலை க்ளிக் செய்து, நீக்க வேண்டிய நபரை செலக்ட் செய்து பின் நீக்கவோ அல்லது பிளாக் மற்றும் அன்பிளாக் செய்யலாம்.

இதற்கு ஃபாலோயிங் டேப் சென்றாலே போதுமானது. அங்கு ஃபீடில் அதிகம் பார்க்கப்பட்டவை மற்று்ம குறைவாக பார்க்கப்பட்ட அக்கவுண்ட் விவரங்கள் பட்டியலிடப்பட்டு இருப்பதை பார்க்கலாம்.

இவைதவிர இன்ஸ்டாகிராம் சமீபத்தில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் கொண்டு எந்த அக்கவுண்ட்கள் பயனர் ஃபீடில் அதிகம் தோன்றுகிறது என்பதையும், எவை குறைந்தளவு தோன்றுகிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo