இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் Infinix யின் மிக குறைந்த விலை கொண்ட 5G போன்.

HIGHLIGHTS

Infinix இந்தியாவில் தனது முதல் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.

இந்த 5ஜி சாதனம் ஜனவரியில் வரலாம் என்று கூறினார்

இந்த 5ஜி சாதனம் ஜனவரியில் வரலாம் என்று கூறினார்

பட்ஜெட் போன் தயாரிப்பாளரான Infinix இந்தியாவில் தனது முதல் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் Infinix India CEO அனிஷ் கபூர் இதனைத் தெரிவித்தார். இந்த 5ஜி சாதனம் ஜனவரியில் வரலாம் என்று கூறினார். இது மட்டுமின்றி இந்த 5ஜி போனின் விலை 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும். தற்போது, ​​நிறுவனம் 4G ஸ்மார்ட்போன்களின் பெரிய போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது.

ஹாங்-காங்கை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்பினிக்ஸ் இந்தியாவில் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இன்பினிக்ஸ் இந்தியா தலைமை செயல் அதிகாரி அனிஷ் கபூர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதனை அறிவித்தார். 
 
ஸ்மார்ட்போன் மட்டுமின்றி புதிய 55 இன்ச் டி.வி. மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக இன்பினிக்ஸ் நிறுவனம் தனது முதல் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் 5 முதல் 6 ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இன்பினிக்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த 55 இன்ச் டி.வி. மாடல் உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகமாகும்.

“ஸ்மார்ட்போனின் விலையை நிர்ணயிக்க பல்வேறு விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும். உதிரிபாகங்கள் விலை மட்டுமின்றி, டாலர் மதிப்பு கடந்த சில மாதங்களில் 8 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த விலையை பாதிக்கும். இருந்தபோதும், ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் விலையை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளோம்,” என அவர் தெரிவித்தார். 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :