INFINIX SMART 4 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்டப் உடன் இந்தியாவில் ரூ,6,999 யில் அறிமுகம்.

INFINIX SMART 4 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்டப் உடன் இந்தியாவில் ரூ,6,999 யில் அறிமுகம்.
HIGHLIGHTS

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்துள்ளது

. INFINIX SMART 4 மொபைல் போன் ஆண்ட்ராய்டு கோ பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்துள்ளது. இது ஸ்மார்ட் 4 என அழைக்கப்படுகிறது. இந்த மொபைல் போன் ஆண்ட்ராய்டு கோ பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, கூடுதலாக இது குவாட் கோர் செயலியையும் கொண்டுள்ளது. இருப்பினும், இது மட்டுமல்லாமல், இந்த மொபைல் போனில் இரட்டை கேமரா அமைப்பையும் வழங்குகிறது. 

விலை தகவல் 

INFINIX SMART 4 மாடல் மிட்நைட் பிளாக், குயிட்சல் சியான், ஓசன் வேவ் மற்றும் வயலெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
 
INFINIX SMART 4  சிறப்பம்சங்கள்

– 6.82 இன்ச் 1640×720 பிக்சல் HD+ 20.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
– IMG PowerVR GE-class GPU
– 2ஜிபி ரேம்
– 32ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) மற்றும் எக்ஸ்ஒஎஸ் 6.2
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, ட்ரிபில் எல்இடி பிளாஷ்
– டெப்த் சென்சார்
– 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, டூயல் எல்இடி பிளாஷ்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டிடிஎஸ் ஹெச்டி சவுண்ட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 6000 எம்ஏஹெச் பேட்டரி
– 10வாட் சார்ஜிங்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 மாடலில் 6.82 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் மற்றும் எக்ஸ்ஒஎஸ் 6.0 டால்பின் ஸ்கின் வழங்கப்பட்டு இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo