Infinix Note 60 Pro Pininfarina
Infinix அதன் Infinix NOTE 60 Pro Pininfarina limited Edition கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமானது, அதனை தொடர்ந்து இன்று முதல் முறையாக அதன் புதிய மாடல் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இதன் அறிமுக சலுகையாக ரூ,2000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போனை வெறும் ரூ,35,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Infinix NOTE 60 Pro லிமிடெட் எடிஷன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இதன் உண்மையான விலை ரூ,37,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Axis, HDFC, ICICI மற்றும் SBI கார்ட் மூலம் வாங்கினால் ரூ,2000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மூலம் மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் மேலும் ரூ,2000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,33,200க்கு வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.
Infinix Note 60 Pro Pininfarina லிமிடெட் எடிஷன் போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 4,500 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் மிக சிறந்த பர்ப்மன்சுக்கு Qualcomm’s Snapdragon 7s Gen 4 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதனுடன் இது 8GB LPDDR5 RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது.
மேலும் இந்த போனில் மிக சிறந்த போட்டோ க்ரைப்பிக்கு 50MP மெயின் OIS கேமரா உடன் இதில் 8MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதில் முன் பக்கத்தில் 13MP முன் கேமரா செல்பிக்கு வழங்கப்படுகிறது
இதில் கடைசியாக பெரிய 6,500mAh பேட்டரியுடன் 90W வயர்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது