Infinix Hot 11 2022 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் அறிமுகமானது.

HIGHLIGHTS

இன்பினிக்ஸ் நிறுவனம் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது

இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 யுனிசாக் T610 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போன் அரோரா கிரீன், போலார் பிளாக் மற்றும் சன்செட் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது

இன்பினிக்ஸ் நிறுவனம் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 8MP செல்ஃபி கேமரா, யுனிசாக் T610 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 சிறப்பம்சங்கள்:

– 6.7 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ IPS LCD ஸ்கிரீன்
– பாண்டா கிங் கிளாஸ் பாதுகாப்பு
– ஆக்டா கோர் யுனிசாக் T610 பிராசஸர்
– மாலி-G52 GPU
– 4GB LPDDR4x ரேம்
– 64GB (eMMC 5.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் XOS 7.6
– 13MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
– 2MP டெப்த் கேமரா, f/2.4
– 8MP செல்ஃபி கேமரா, f/2.0
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5mm ஆடியோ ஜாக், DTS ஆடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
– யு.எஸ்.பி. டைப் சி
– 5000mAh பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்

புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பின்புறம் மேஜிக் டிரையல்களின் பேட்டர்ன், 5000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 விலை தகவல்.

இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போன் அரோரா கிரீன், போலார் பிளாக் மற்றும் சன்செட் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது. இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போன் விற்பனை ஏப்ரல் 21 ஆம் தேதி துவங்குகிறது. இதன் அறிமுக விலை ரூ. 8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :