6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் Infinix Hot 10 ரூ. 9,999 விலையில் அறிமுகம்.

HIGHLIGHTS

infinix hot 10 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

infinix hot 10 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

இதன் விற்பனை அக்டோபர் 16 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் ஹெச்டி பிளஸ் பின்ஹோல் எல்சிடி ஸ்திரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது. 

விலை மற்றும் விற்பனை தகவல்

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் ஓசன் வேவ், ஆம்பர் ரெட், மூன்லைட் ஜேட் மற்றும் ஆப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 16 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

Infinix Hot 10 ​சிறப்பம்சங்கள்

– 6.78 இன்ச் 1640×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20.5:9 பின்ஹோல் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
– ஏஆர்எம் மாலி ஜி52 2இஇஎம்சி2 ஜிபியு
– 6 ஜிபி ரேம்
– 128 ஜிபி மெமரி
– டூயல் சிம் ஸ்லாட்
– எக்ஸ்ஒஎஸ் 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 2 எம்பி டெப்த் கேமரா
– லோ-லைட் வீடியோ கேமரா, குவாட் எல்இடி பிளாஷ்
– 8 எம்பி செல்பி கேமரா, f/1.8, டூயல் எல்இடி பிளாஷ்
– பின்புறம் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 5200 எம்ஏஹெச் பேட்டரி

புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், லோ-லைட் வீடியோ கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5200 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :