இந்தியாவில் மிக பாப்புலராக இருக்கும் 5, 5G பெஸ்ட் மொபைல்கள்
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் ஸ்மார்ட்போன்களில் பல் அசுரர் வளர்ச்சியை அடைந்துள்ளது இதனுடன் 2G,3G ,4G பயன்படுத்திய காலம் போய் இப்பொழுது 5G யில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்கள் வர ஆரம்பித்துள்ளது , அதனை தொடர்ந்து இப்பொழுது நம் நாட்டில் அனைத்துமே 5G ஆக மாற போகிறது அதனை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி ஜியோ அடுத்த மாதம் 5G சேவையை சோதனை செய்ய உள்ளது இதனுடன் . இப்பொழுது 5G ஸ்மார்ட்போன் வர ஆரம்பித்துள்ளது ஏற்கனவே 4G யில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்த பின்னும் இப்பொழுது 5G ஸ்மார்ட்போன்கள் வர ஆரம்பித்துள்ளது 5G வருவதற்கான முதல் காரணம் இந்த 10 லிருந்து 2oMpbs முழுமையாக வழங்குவதற்கு 5G ஸ்பீட் கொண்டு வரப்பட்டது.அதனை தொடர்ந்து 2020 க்குள் லேப்டாப்,ஸ்பீக்கர், கார்,மற்றும் நம்மை சுற்றி இருக்கும் அனைத்து தொழில்நுட்ப பொருட்களும் 5G ஆக மாற உள்ளது சரி வாருங்கள் பார்க்கலாம் 5G யில் எத்தனை ஸ்மார்ட்போன்கள் வந்து இருக்கிறது என்று
Survey1. SAMSUNG GALAXY S10 5G
சாம்சங் அதன் 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது Galaxy S10 5G ஸ்மார்ட்போனை பார்க்கும்போது அசல் அதன் Galaxy S10+, ஸ்மார்ட்போன் போலவே இருக்கும் ஆனால் இதில் 4500mAh பெரிய பேட்டரி கொண்டுள்ளது இதனுடன் இதில் 25W பாஸ்டஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.இதனுடன் இதில் கூடுதலாக ToF கேமரா சென்சார் இதனுடன் இது லோ லைட் ஷாட்ஸ் மற்றும் வேகமான ஆட்டோபோகஸ் மோட் ஆகியவை வழங்குகிறது.
Galaxy S10 5G ஸ்மார்ட்போனில் 5G 8GB RAM+ 256GB ஸ்டோரேஜ் வகையில் இருக்கிறது இதனுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது நமக்கு தெரிந்ததே
2 HUAWEI MATE X
Huawei நிறுவனம் தனது Mate X மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் (MWC ) அறிமுகம் செய்தது Huawei நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு 5ஜி சேவை கிடைக்காது என்றாலும், இந்தியாவில் அறிமுகமாகும் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ஹூவாய் மேட் எக்ஸ் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம் வழங்கி இருக்கிறது. இத்துடன் பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஹூவாயின் நானோ மெமரி கார்டுகளை சப்போர்ட் செய்கிறது.ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் 6.6 இன்ச் (2480×1148 பிக்சல்) மெயின் டிஸ்ப்ளேவும், ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8-இன்ச் மெயின் டிஸ்ப்ளே (2480×2200 பிக்சல்), ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் (25:9. 2480×892 பிக்சல்) டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
3. OPPO RENO
Oppo Reno 5G தொழில்நுட்பத்துடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனம் தனது ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனை கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்தது. புதிய ரெனோ ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அதன் 10X லாஸ்-லெஸ் சூம் வசதி இருக்கிறது. சீனாவை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது. ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 28 ஆம் தேதி அறிமுகமாகும் என ஒப்போ அறிவித்திருக்கிறது. ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் மற்றும் 10x லாஸ்-லெஸ் சூம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெனோ ஸ்டான்டர்டு எடிஷனில் 6.4 இன்ச் ஃபுல் HD . பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படுகிறது. இதன் 10x லாஸ்-லெஸ் சூம் வெர்ஷன் 6.6 இன்ச் ஃபுல் HDR பிளஸ் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
4. SAMSUNG GALAXY FOLD
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,38,314) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் வரலாற்றில் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஃபோல்டு இருக்கிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற வகையில் வடிவமைப்பு மற்றும் புதுமையில் பலரையும் கவர்ந்த கேலக்ஸி ஃபோல்டு எளிதில் உடைந்து போன விவகாரம் விமர்சகர்கள் மற்றும் செய்தியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவின் மேல் ஒட்டப்பட்ட மெல்லிய ஸ்கிரீனை நீக்கியதும் டிஸ்ப்ளே உடைந்து செயலிழந்து போனது.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்ட்ரகன் 855 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த போனில் UFS 3.0 ஸ்டோரேஜ் அதாவது 512GB). மற்றும் இதில் 4380mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
5 ONEPLUS 7 PRO
சமீபத்தில் வந்த புதிய தகவலின் படி OnePlus 7 Pro யின் யூரோப் விலை இங்கு அறிமுகமாகியுள்ளது.இதனுடன் இங்கு கலர் வகைகளும் தெரிய வந்துள்ளது.ஐரோப்பியன் சந்தையில் ONEPLUS 7 யின் விலையை பற்றி பேசினால் அதன் ஆரம்ப விலை EUR 699 அதாவது இந்திய விலையுடன் ஒப்பிடும்போது 54,700ரூபாயாக இருக்கும். இதனுடன் நிறுவனம் இதில் HDR 10+ டிஸ்பிலே மற்றும் டிஸ்பிலே மற்றும் UFS 3.1 சேமிப்பு உறுதிப்படுத்தியது. இந்த சாதனம் Almond, Mirror Grey மற்றும் Nebula Blue வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
OnePlus 7 Pro மதிப்பிடப்பட்ட விலை
Slashleaks ரிப்போர்ட்டில் வந்த தகவலின் படி இந்த போனில் ஒரு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை EUR 699 அதாவது சுமார் 54,700 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இந்த 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை பயனர்களுக்கு EUR 819 அதாவது 64,100ரூபாயில் இருக்கிறது
6. HUAWEI MATE 20 X 5G
Huawei’ யின் இந்த ஸ்மார்ட்போன் போல்டப்பில் போங்க இருக்காது ஆனால் இது ஒரு 5G சாதனமாக இருக்கிறது மேலும் இந்த Mate 20 X 5G போனில் ஒரு புதிய மொடர்ம் r 4200 mAh பேட்டரி ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதை நாம் 5,000 mAh உடன் ஒப்பிடும்போது 4,200 mAh பேட்டரி சிறியது தான் இதனுடன் இதில் 40W சூப்பர் சார்ஜ்ர் வழங்கப்பட்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile